பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi

ஆற்றோரம் என்ற சொற்பொழிவுக்கே ஏற்பாடு செய்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊர்ப் பெருமக்கள் பள்ளிக்குத் திரண் டெழுந்து சொற்பெருக்கைச் செவிமடுத்து மகிழ்ந்தது இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. அன்று முதல் அண்ணா கிரந்தரமாக என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ளார்.

அண்ணா தமிழக ஆட்சிப் பொறுப்பேற்று, 1968இல் இரண்டாவது உலகத் தமிழ்மாநாடு கூட்டி ஆற்றிய அருஞ் செயல்களும் அவர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய முதல் ஆங்கிலப் பேருரையும்” நேரு போன்ற உலகத் தலைவர்களை யும் வியக்க வைத்தன. ஆட்சியிலிருந்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் தம்முடைய தன்னலமற்ற செயல்களாலும், எதிர்க் கட்சித் தலைவர்களையும் அரவணைத்துக்கொண்டு செயற் பட்ட பெருமையாலும், மக்கள் முன்னேற்றமே காட்டின் முன்னேற்றம்’ என்ற குறிக்கோள் நெறியில் செயற்பட்ட சிறப்பாலும் தமிழ்ப் பெருமக்கள் இதயத்தில் கிரந்தர இடத் தைப் பிடித்துக்கொண்டு இன்றும் அவர்கள் திருவுள்ளத்தில் வாழ்கின்றார். இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழகம் பொன்னுலகம் ஆகியிருக்கும் என்பது சிறியேனின் கணிப்பு. இந்த நூலை எழுதி முடித்த அன்றே இப் பெரு மகனாருக்கு இதனை அன்புப் படையலாக்கத் திட்டமிட்டிருந் தேன். அதை இப்போது கிறைவேற்றுகின்றேன். அமரர் அண்ணாவின் ஆசி பெற்று 22 ஆண்டுகட்குமேல் உறங்கிக் கிடந்த குழந்தை இப்போது தமிழகத்தில் தவழ்கின்றது. கடை போடுகின்றது. தமிழகப் பெருமக்கள் இக் குழந்தையை வாரி. எடுத்துக் கொஞ்சுவார்கள் என்பது என் திடமான நம்பிக்கை.

இந்த அறிவியல் நூல் வெளியுலகில் நடைபோட இருபதாண்டுகளாக முடங்கிக் கிடந்தாலும், எப்படியோ 8. Anna Speaks - at the Rajya Sabha 1962–66. Orient Longman Ltd—Published in 1975.