பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 23

வல்லியலார் யார்?

இந்த உலகம் தோன்றிய நாள்தொட்டுப் பெண்களை ஆண்கள் “மெல்லியலார்’ என்று பெயரிட்டு வழங்கி வருகின்றனர். எப்படியோ இவர்கட்கு இப்பெயர் வழங்கப்பெற்றுவிட்டது எனறு வைத்துக் கொள்வோம்: இந்தப் பெயர் நிலைத்தும் போய்விட்டது. ஆனால் உண்மையில் வல்லியலார் யார்?

ஒரு முறையில் நோக்கினால் மெல்லியலார்’ என்ற இப்பெயர் முற்றிலும் தவறு என்பது தெரியவரும். உடல்நலத்தையும் உடல் நிலையையும் பொறுத்தவரையில், பிறப்பதற்கு முன்பிருந்தே, வாழ்க்கை முழுவதிலும பெண்களே ஆண்களைவிட உயர்நிலையில் உள்ளனர் என்பது தெரியவரும்.

சிந்தனை செய்து பார்த்தால் இதுபற்றிய காரணங்கள் தெளி வாகப் புலனாகும். முதலாவதாக, உடல் அமைப்பிலும் அது செயற் படும் வகையிலும் பொதுவான பால் - வேற்றுமைகள் உள்ளன. இவ் வேறுபாடுகள் நோய்களைத் தடுப்பதற்கும் அவற்றைத் தாங்கு வதற்குமான வசதிகளைப் பெண்களுக்கு அளிக்கின்றன. இரண்டாவ தாக, நேர் முறையில் மரபுவழியாக இறங்கும் நோய்களாலும், குறை களாலும் ஆண்களே எளிதில் பீடிககபபெறக்கூடியவர்களாக உள்ளனர். இதனை இப் பகுதியில் விளக்குவோம். மூனறாவதாக, சூழ்நிலைபற்றிய கூறுகளும் பெண்களுக்குத் துணையாகவுள்ளன. மேற்கொள்ளும் தொழில்கள், பழக்கவழக்கங்கள், நடத்தைகள் இவை ஆண்களை அதிக விபத்துக்குள்ளாக்குகின்றன.

பிறப்பதற்கு முன்னரே - கருவுலக வாழ்வில் - ஆண் குழவி கட்கே பல்வேறு இடர்கள் நேரிடுகின்றன. பெண் குழவிகளைவிட