பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லியலார் யார் ? 1 69

ஒரு பெண் தன்னுடைய X-நிறக்கோல்களுள் ஒன்றில் பின் தங்கும் தீய ஜீனைப பெற்றால் அவளுடைய மற்றொரு X-கிறக் கோலில் சாதாரணச் செயலில் பங்கு கொள்வதற்கு நன்னிலை யிலுள்ள ஒரு ஜீன் உள்ளது. மோட்டார் வண்டியின் சக்கரத்தின் டயர் வெடித்துப்போகுங்கால் சேமச் சக்கரத்தின் டயரை பயன்படுத்து வதனுடன் இதனை ஒப்பிடலாம். ஆனால், ஆண் தன்னுடைய ஒரே ஒரு X-நிறக்கோலில் இத்தகைய தீய ஜீனைப் பெற்றால், அவ னுடைய நிலை மோசமாகின்றது; அவனுடைய மிகச் சிறிய Y-நிறக் கோலில் இத்தகைய ஜீனை ஈடுசெய்வதற்கான ஒரு ஜீன் பெரும் பாலும் இருப்பதில்லை. இங்கிலை சேமச் சக்கரத்துடன் கூடிய டயர் இல்லாத மோட்டார் ஒட்டியின் நிலையைப் போன்றது. இந் நிலை யைப் படம் (படம்-43) விளக்குகின்றது.

படம் - 43 : பால்-இணைப்பு’ வழிவருதலை ( Inheritance) 6,36T#Gsugl.

குறிப்பு : X நிறக்கோல் Y நிறக்கோலை விடப் பன்மடங்கு பெரிதாக இருப்பதையும், X நிறக்கோலின் ஒவ்வொரு ஜீனுக்கும் பொருத்தமாகவுள்ள ஜீன்கள் Y நிறக்கோலில் இல்லாமையையும் படத்தில் கண்டு தெளிக.

X-நிறக்கோலில் பல குறைகளுக்குக் காரணமாகவுள்ள பின் தங்கும் பல ஜீன்கள் இருப்பின், அவனுடைய அவக்கேடான நிலை யைச் சொல்ல வேண்டியதில்லை. இதனால்தான் பிறப்பதற்கு முன்னிருந்தே ஆண் குழவிகளின் நிலை பரிதாபமாகவுள்ளது. ஆணிடமுள்ள X-நிறக்கோல் தன் தாயிடமிருந்தே வரககூடுமாத