பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வாழையடி வாழை

லால், பெரும்பாலான குறைகளை ஆண்கள் தம் தாய் வழியாகவே பெறுகின்றனர் என்பதையும் அறிகின்றோம்.

ஹெமோஃபீலியா (Hemophilia) : பால்-இணைப்பு’ (Sex1inked) நிலைகளில் மிக முக்கியமானது இந்தக் குருதிப் பெருக் கெடுசகும் நோயாகும். இந்நோய் மரபு வழியாக இறங்குவதைப் படம் (படம்-44) விளக்குகின்றது.

X-நிறக்கோலில் அமைந்துள்ள குருதியுறைதலுக்குக் காரண மாகவுள்ள ஜீன் குறையுடனிருக்கும்பொழுது இந் நோய் ஏற்படு கின்றது இததகைய நோயுடையவர்கள் இளமையிலேயே இறப்பது வழக்கம்; ஆயினும், இவர்கள் இளமைப் பருவங்கடந்து நடுப்பருவம் வரையிலும் தப்பிப பிழைத்தால் (அதற்கு மேல பிழைப்பது அருமை) மூட்டுகளில் குருதிப் பெருக்கெடுத்து முடமாகிவிடுவர் இத்தகைய நோய் மிகவும் அரிதாக ஏற்படுகின்றது.

சாதாரணமாக இந்த நோய் ஏற்படுவதற்குக் காரணமான ஜீன் சடுதி மாற்றத்தால் ஏற்படுகினறது என்று ஆய்வாளர்கள் கருதுகின் றனர். இம முறையில் ஜீன்களால் இந்த நோய் உண்டாகாமல் இருப் பின் இனப்பெருக்க வயதடைவதற்கு முன்னரே ஆண்கள் இறப்பதன் மூலம் இந் நோய் நீண்ட நாட்களுக்கு முன்னரே இவ்வுலகினை விட்டே நீங்கியிருக்கும். பெண்களிடம் இங் நோய் தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் பெறும் ஒவ்வொரு X-நிறககோல்களிலுமுள்ள ஒவ்வொரு ஜீன் வீதம் சேரும் இரண்டு குறைபாடுள்ள ஜீனகளால் உண்டாகின்றது. இத்தகைய நோயாளி இருபபது அரிது. இங்ஙனம் இருமடங்கு ஹெமோஃபீலியா குழவிகள் கருப்பத்திலேயே அல்லது பிறந்த உடனேயே மரித்துவிடுகின்றன. இதுகாறும் இந் நோயை நீக்குவதில் நம்பகமான முறைகள கண்டறியப்பெறவில்லை. ஆனால் நவீன மருத்துவ முறைகளால் இக் நோயாளிகளின் ஆயுளைச் சிறிது கீட்டிககலாம்.

நிறக்குருடு : இது குடிவழியாக வரும் ‘பால்-இணைப்புள்ள’ நிலைகளால் ஏற்படும் பெருவழக்காகவுள்ள நோயாகும். பெரும்

1. FGGudrpth - Mutation,

2. p(DG – Colour blindness.