பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii

இறுதியில் வெளியுலகப் பார்வைக்கு இலக்காகிவிட்டது. எத்தனையோ சோதனைகட்கு என்னை உட்படுத்திவரும் ஏழுமலையப்பன் நூல் வெளிவருவதிலும் யான் பொறுமை யுடன் காத்திருக்கின்றேனா அல்லது மனம் உடைந்து உற்சாகம் குன்றிவிடுகின்றேனா என்று என்னைச் சோதிக் கின்றான் என்றே எனக்குப் படுகின்றது. என்ற போதிலும் அவனே எனக்குத் தாக்குப் பிடிக்கும் திராணியையும் நல்கி என்னை உய்ய வைக்கின்றான் என்பது என் அதிராத கம்பிக்கை. இங்ஙனம் எல்லாம் என் செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலை என் மெய் மனம் மொழிகளால் வாழ்த்தி வணங்குகின்றேன்.

ஏத்திமத மெல்லாம் எதையறிந்தேம் என்னும்? எதைச் சாத்திரம்நன் காய்ந்து சலிக்கும்? எதை-நாத்திகமோர் சற்றுமே ஒர்ந்திலதாச் சாதித்திடும்? அதையே பற்றுவாய் நெஞ்சே ! பரிந்து.

--வெ. ப. சுப்பிரமணிய முதலியார்

வேங்கடம்’

ண்ணா நகர் சென்னை-600 04 0 ந. சுப்பு ரெட்டியார்

3 —7 — 1984

9. அகலிகை வெண்பா - காப்பு.