பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 80 வாழையடி வாழை

யுடையவராக இருப்பர். ஒரு ஜீன் இவ்வகைப் பெண்ணிடம் வழுக்கையை விளைவியாது. ஆனால் இவளுடைய ஆண்பிள்ளை களில்இருவருக்கு ஒருவர்வீதம் வழுக்கை மண்டையினைப் பெறுவர். மூன்றாம்வகை ஆணிடமும் பெண்ணிடமும் இரண்டு சாதாரண ஜீன்களே உள்ளன. இவ்வகை ஆணின் மனைவி முதல்வகை யினையோ அல்லது இரண்டாம் வகையினையோ சேராதவளாக இருபபின் இவருடைய ஆண்பிள்ளைகளிடம் வழுக்கைமண்டை அமையாது. இந்த வகைப் பெண்ணின் கணவர் வழுக்கைமண்டை யராக இல்லாதிருப்பின், இவளுடைய ஆண் பிள்ளைகளிடமும் வழுக்கை மண்டை அமையும் வாய்ப்பு இராது.

மேற்கூறிய செய்திகளையெல்லாம் சேர்த்து நோக்கினால் யார் மெல்லியலார்? யார் வல்லியலார்? என்பது தெளிவாகும். ஆண் களே பெண்களைவிட வலியவர்கள், சிறுவர்கள் தம்முடைய மெல்லியல் சகோதரிகளைவிட அதிகத் திண்ணியராக இருத்தலின் அவர்களை அதிகம் கவனித்தல் வேண்டா என்ற பழைய பிழையான வாதத்தைக் (Old fallacy) குழிதோண்டிப் புதைக்கவேண்டும் என்பது தெளிவாகும். பெரிய எலும்புகளும் பழுவான தசைகளும் நோய்களையும் இறப்பினையும் தாங்கும் ஆற்றல்வாய்ந்தவை எனற எண்ணத்தால் எழுந்த வாதம் இது. ஆற்றங்கரையில் ஓங்கிப்பருத்த அரசமரம், ஆற்றோரத்தில் நலிந்ததாகக் காணப்பெறும் மெல்லிய நாணற்புல் இவற்றுள் எது பெரும்புயலுக்குத் தாங்கிநிற்கும் என்பதை ஈண்டு நினைவுகூர்ந்தால் உண்மையில் வல்லியலார் பெண்களே என்பது தெளிவாகும்.