பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைபாடுள்ள உடலமைப்பு

சாதாரணமாக எல்லா மனிதர்களுடைய உடலமைப்பும் கிட்டத் தட்ட ஒரேமாதிரியாகத்தான் உள்ளது என்பதை மேம்போக்காகப் பார்ப்போர் அறிவர். கூர்ந்து நோக்கினால் அதில் பல்வேறு வேறு பாடுகளை அறியலாம். மேம்போக்காகத் தென்படும் இயல்பிகந்த பண்புகள் எளிதில் கண்டறியப்பெற்று, வகைப்படுத்தப்பெற்று. வழிவழி இறங்கும் நோக்கத்தில் ஆராயப்பெற்றுள்ளன. குள்ளர்கள். உறுப்புத்திரிபுடையவர்கள், இந்தியா-ரப்பர் மனிதர்கள் போன்ற ஜீன்களின் படைப்புகளைத்தவிர வேறு பல வேறுபாடுகளும் உள்ளன. இவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டு நோக்குவோம்.

உயர அளவு : குள்ளர்கள்’ அல்லது “லில்லிபுட்’ மனிதர்கள் நமது கவனத்தை ஈர்ப்பவர்கள். உயரத்திற்குக் காரணமாகவுள்ள அடித்தலைச் சுரப்பியின குறைபாடு காரணமாக இவர்கள் குழவிப் பருவத்திலேயே சரியாக வளர்வதில்லை: மூன்றரை அடி உயரத் திற்குமேல் இவர்கள் வளர்வது அரிது.” இவர்களின் உடலமைப் பிற்கு மிகவும் அரிதாகக் காணப்பெறும் தனித்தனியாக இரண்டு ஓங்கிகிற்கும் ஜீன்களே காரணமாக இருக்கலாம் என்று கருதப் பெறுகின்றது. ஆனால் ஃபிலிப்பைன் தீவுகள், கியூகினியா போன்ற இடங்களில் காணப்பெறும் குள்ளர்கள் (Pygmies) இவர் களிலும் வேறானவர்கள். இவர்களிடமுள்ள ஜீன்கள் யாவும் இந்த அமைப்பினையே விளைவிக்கும்.

1. Gsirsrssir - Midgets. 2. ஆனால், 21 அங்குளமுள்ள ஒருவர் 74 வயதுவரை வாழ்ந்து 1949-இல் இறந்த வரலாற்றையும் அறின்கின்றோம்.