பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வாழையடி வாழை

மேற்கூறப்பெற்ற குள்ளர்களுக்கு நேர்மாறாக இருப்பவர்கள் பேருருவினர்” ஆவர். இந்த உயரத்திற்குக் காரணமான ஜீன்களை யுடையவர்கள் ஏழடி உயரம் வரையிலும் வளர்வர். ஆயின், எட்டடிக்கு மேலும் வளர்பவர்களிடம் அடித்தலைச் சுரப்பி குலை வுற்றதன் காரணமாகவே அதிக வளர்ச்சி ஏற்படுகின்றது என்ப தாகக் கொள்ளவேண்டும். ஆனால் மிகக் கொழுத்த ஊளைச் சதை உடலமைப்பு சுரப்பிக் கோளாறுகளாலேயே ஏற்படுகின்ற தென்றும், இதில் குடிவழியின் பங்கு இல்லையென்றும் அறிவிய லறிஞர்கள் கருதுகின்றனர்.

கைகளும் பாதங்களும் : கிட்டதட்டப் பத்து வகைக்கு மேற் பட்ட இயல்பிகந்த கை வகைகளைக் கண்டறிந்துள்ளனர். குறுவிரல் கள், ஆறுவிரல்கள், சிலந்தி விரல்கள், பிளவுற்ற உள்ளங்கைகள், ஒட்டிய விரல்கள், விரல் மூட்டுகள், கோணலான விரல்கள் போன்ற வைகள் அவற்றுள் சில. ஒருசிலவற்றைப் படத்தில் (படம்-49) காணலாம். பெரும்பாலோரிடம் இதே நிலைமைகளைப் பாதங்களி லும் காணலாம்.

இங்கிலை பெற்றோரிடமிருந்து பிள்ளை அடையும் ஓர் ஓங்கி நிற்கும் ஜீனினால் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலை மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்; இது வேறு ஜீன்கள் இணைந்து செயற்படுவதாலும், வேறு புறக் கூறுகளாலும் ஏற்படக் கூடும். ஒரே குடும்பத்தில் பல்வேறு அமைப்புகளைக் காண நேரிட லாம். ஒருசிலர் உள்ளங்கையும் பாதமும் இல்லாமலும், புயங்களும் கால்களும் இல்லாமலும், அல்லது முக்கியமான எலும்பு இல்லாம லும் பிறக்கலாம்; இவை அரிதாக ஏற்படுபவை. ஆனால், இவற் றுள் சில பிறப்பதற்கு முன்னர் நேரிடும் இடராலும் வேறு சில குறை பாடுள்ள ஜீன்களாலும் ஏற்படலாம் என்று கருதுகின்றனர்.

எலும்புக்கூடுபற்றியவை : “எ ளி தி ல் நொருங்கக்கூடிய

எலும்புகள்’ என்பது ஒருவகை நோய். நார்வே இளைஞன் ஒருவன்

3. GL105(567sort – Giants. 4. 8 அடி 10 அங்குலம் வரையில் வளர்ந்து 22-ஆவது வயதில் 1940-இல் இறந்த ஒருவர் வரலாறும் அறியப்பெறுகின்றது.