பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைபாடுள்ள உடலமைப்பு 185

ஒருசிலரிடம் மேல் வரிசைப் பற்களும் கீழ் வரிசைப் பற்களும் சரியாகப் பொருந்துவதில்லை. தவறாத மெல்லும் பழக்கம் இதற்குக் காரணம் என்றாலும், மரபுவழியின் பங்கும் இங்கிலைக்கு உண்டு. பல பற்சிப்பிக்’ குறைகள் யாவும் குடிவழியாக நேரிடுபவையே. சிலரிடம் பற்சிப்பி விரைவில் கேடுறுகின்றது; சிலரிடம் அதில் குழி வுகள் ஏற்படுகின்றன; வேறு சிலரிடம் வண்ண வேறுபாடுகள் நிகழ் கின்றன. ஓங்கி நிற்கும் பால்-இணைப்பு ஜீனொன்றால் (X-நிறக் கோலிலுள்ளது) தவிட்டு நிறப் (Brown) பற்கள் உண்டாகின்றன. ஒருசிலரிடம் பின்தங்கி நிற்கும் ஜீனினால் செங்கிறப் பற்கள் ஏற்படு கின்றன. பிற்கூறிய நிலை மிகவும் அரிது. மேலும், ஒருசிலரிடம் பளிங்கு போன்ற பற்கள் உள்ளன; இவை எளிதில் தேய்ந்து போகும், அல்லது உடைந்து போகும். இஃது ஓங்கி நிற்கும் ஜீன் ஒன்றால் நேரிடுகின்றது. எனினும், நீரிலுள்ள வேதியியற் பொருள் களும், உணவிலுள்ள குறைகளும் இங்கிலையை உண்டாக்குகின்றன.

தோல் : தேலின்மீதுள்ள குறைகளை - இயல்பிகந்த தன்மை களை - எளிதில் கண்டறியலாம். இவற்றினைப்பற்றி மிக நன்றாக ஆராயப்பெற்றுள்ளது. இவற்றுள் பெரும்பான்மையானவை மரபு வழியாக இறங்குகின்றன என்பதாக அறியப்பெற்றுள்ளது. பெரும் பான்மையான இக் குறைகளால் விபத்து ஒன்றும் இல்லையெனி னும், தனிப்பட்டோரின் பொருளாதார, சமூக நிலைகளைப் பெரிதும் பாதிக்கின்றன; அலுவல் கிடைத்தல், சமூகப் பொருத்தப்பாடு, திருமணம் இவற்றிற்கு இவைத் தடைகளாக உள்ளன. எனினும், சில தோல் நிலைகள் உடல்பற்றிய கேடான விளைவுகளை உண்டாக்க லாம்; ஒரு சில இறப்பிலும் கொண்டு செலுத்தலாம்.

இந்த விநோதமான நிலைகளுள் ஒன்று இரப்பர் தோல்” என்பது. இங்கிலை மனிதர்களின் தோல் நீளுந்தன்மையுடையது. மார்புத் தோலை அல்லது முன்கைத்தோலை ஐந்து அல்லது ஆறு அங்குலம் வரையிலும் இழுக்கலாம்; இது பின்னர் பழைய நிலையையே அடைந்துவிடும். இம் மனிதரிடம் துவள் இழையம்’ அதிகமாக

10. Ljf'lo - Enamel.

11. 3,16,16ir gooupuith - Elastic tissue