பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 வாழையடி வாழை

அமைந்திருப்பதே இதற்குக் காரணம் ஆகும். இங்கிலை அரிதாக வுள்ள ஓங்கிநிற்கும் ஜீனால் ஏற்படுவது. மற்றொரு விநோதமான நிலை நிலையான “வாத்துத்தசை'யை உண்டாக்குவதாகும். மயிர்க்கால்கள் தோறும் குண்டுசியின் கொண்டையளவு தோல்கள் சேர்வதால் உண்டாகும் நிலை பெரும்பாலும் ஆணிடமே காணப் பெறும். இது பால்-செல்வாக்குள்ள பின்தங்கும் ஜீன்களால் ஏற்படு கின்றது.

தோல்பற்றிய விநோதமான பண்புகளில் ஒன்று பிறப்பு அடிை யாளங்கள்’ உண்டாதல் ஆகும். ஒவ்வொருவருக்கும்.இவ்வகையான ஏதாவதொரு அடையாளம் இருக்கும். பெரும்பாலும் இவை மரபுவழி யாக ஓங்கிநிற்கும ஜீன்களால் ஏற்படுபவை. புற்றுநோய் தன்மையுள்ள ஒருசில அடையாளங்களும் உள்ளன. பிறப்பு அடையாளங்களைப் பற்றி கால்வழியியல் அறிஞர்கள் ஏராளமான செய்திகளைத் திரட்டி யுள்ளனர், சோவியத் யூனியனிலுள்ள ஒரு பெண்ணிடம் இடப் புறமாக மேலிருந்து கீழ்வரை மெனமயிர்த்திரள் போன்ற ஓர் அடை யாளம் இருந்ததாக ஆராய்ச்சி இதழில் காணப்பெறும் ஒரு செய்தி யால் அறிகின்றோம்.”

வெண்குட்டிம்” என்பது தோல்-நிறமியின் குறையினால் ஏற்படுவது. இது பின்தங்கும் ஜீன்களால் ஏற்படுவது. இதில் தீவிரமற்ற ஒரு வகையில் பிறக்கும்பொழுது தோலிலும் மயிரிலும் நிறமற்றிருந்து பிற்காலத்தில் வெண்ணிறத்தை அடைவது இங்கிலை ஓங்கிகிற்கும் ஒரு ஜீனினால் ஏற்படுகின்றது. இதில் பல வகைகள் 2-6s 6trr.

மயிர் : மயிர்பற்றிய முக்கியமான குறை வழுக்கை ஏற்படுவ தாகும். சிலரிடம் முற்றிலும் வழுக்கை காணப்பெறும். சிலரிடம்

12. 6 jirgg,133,603 - Goose flesh. 13. Du?ifirst). Beir - Hair follicles 14. பிறப்பு அடையாளங்கள் - Birth marks. 15. Journal of Heredity - 1945. 1 6. Gl6u67r51:_L_th - Albenism.