பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் சார்ந்த குறைபாடுகள் i 95

வண்ண மைகளும் தும்மலை விளைவித்ததாம். கலிஃபோரினியாவி லுள்ள ஒரு பெண்மணிககுத் தன் கணவனே ஒவ்வாமையாக இருந் தானாம். உண்மையில் அவள் கணவனிடம் அன்பு கொண்டவளே. ஆனால் அவன் நேரில் இருக்கும்பொழுது, அவனைப்பற்றி யாராவது பேச்சு எடுத்தாலும்-அவள் நிலைகுலைந்து உடம்பெல்லாம் தடித்து விடுமாம். அவள் காச நோயினால்” பீடிக்கப்பெற்றுக் குணம் அடைந்தவள். இவையும் ஒவ்வாமை விநோதங்கள்.

சிலவகை உணவுகள், மருந்துகள், ஆல்க்கஹால், புகையிலை, காய்கள், பூனைகள் ஆகியவை சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கும். இவை யாவும் உடல் வேதி இயல் சரியாகச் செயற்படாமையால் விளைகின்றன. நரம்புக் கோளாறு உள்ளவர்களிடம் இஃது அதிகமாக நேரிடுகின்றது; அடிக்கடி தொடர்ந்து இக் நோய் ஏற்படுவதாலும் சிலரிடம் நரமபுக் கோளாறும் நேரிடுகின்றது. ஆய்வாளர்கள் இஃது இரண்டுவித ஓங்கி கிற்கும் ஜீன்களால உண்டாகின்றது என்றும், இவற்றின இரட்டைச் சேர்க்கை பூப்பு’ அடைவதற்கு முன்னதாகக் கடுமையாக ஏற்படுகின்றதென்றும், ஒற்றை ஜீன் பூபபுக்குப் பிறகு தீவிரமற்றதாக உண்டாக்குகினறதென்றும் கூறுகின்றனர்.

களைப்புத் தலைவலி’ என்பதை ஓர் ஒவ்வாமை நிலையாக அறிஞா பலர் கருதுகின்றனர். இதனை ஒரு தலைவலி” என்றும் சொல்லலாம். தலையிலுள்ள குருதிக் குழல்கள் அடிக்கடி வீங்குவதால் இஃது ஏற்படுகின்றது. இஃது ஓங்கி கிற்கும் ஜீனினால் நேரிடுகின்றது. ஹார்மோன்களின் செல்வாக்கும் இதற்கு உண்டு. பெரும்பாலும் பெண்கள் மாதவிடாயின்பொழுது இக் கோயினால் அதிகமாகத் துன்புறுகின்றனர்.

குருதி நோய்களும் கோளாறுகளும் :” இவ் வகையில் ஹெமோஃபீலியாவைபபற்றி முன்னாக் கூறினோம். அடுத்து கம்

25. &rsf (3p5rt - Asthm3. 26. gbi'il ) – Pubertv. 27. களைப்புத் தலைவலி - Migraine. 28. Garsirs pi - Disorder.