பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் மனமுடையோர்

இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரண்டு பயங்கரமான நோய்கள் சிலரிடம் நிலவுகின்றன. இவற்றில் ஒன்று ஹண்டிங்க்டன் கோரியா’’ எனபது; மற்றொன்று, பிக்கின் நோய்’ என்பது; இது மூளையின் சில பிரிவுகள் (Lobes) நசித்துப போவதால் ஏற்படுவது. இவற்றுள் முதலாவது இங்கிலாந்தினின்றும் அமெரிக்க ஐக்கிய காடுகளில் 17-வது நூற்றாண்டில் குடியேறிய மூன்று சகோதரர்கள் மூலம் இறக்குமதியாயிற்று என்பதாகச் சொல்லப்படுகின்றது. இவர்கள் ‘புதிய இங்கிலாந்து’ என வழங்கும் ஒரு பகுதியில் குடி யேறினும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆயிரத்திற்கு மேற் பட்டோர் இந் நோயினால் மிகப் பயங்கரமான முறையில் மடிந்தனர் என்று கூறுகின்றனர். ஓங்கி கிற்கும் ஓர் ஒற்றை ஜீன் இந்த நிலையை விளைவிக்கின்றது என்று நம்புகின்றனர்.

ஓர் ஆடவரோ (அல்லது மகளிரோ) சாதாரணமாக யாதொரு குறையுன்றி இருப்பதுபோல் காணப்பெறலாம், ஏன் ? கூர்த்த மதியுடையவராகவும் தோன்றலாம். ஆனால் இவர் நன்கு வளர்ந்து முதிாந்த நிலையை அடையும்வரையிலும் இவரிடம் யாதொரு தீமை பயக்கும் அடையாளமும் தெனபடுவதில்லை. அதன்பிறகு, திடீரென்று ஒருநாள் அவர் சிதைவுறத் தொடங்குகின்றார். இது வழக்கமாக முபபதாண்டு பருவத்தில-சில ஆண்டுகள் முன்னரோ

1. Huntington Chorea.

2. Pick’s Disease.