பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 வாழையடி வாழை

அல்லது பின்னரோ - நேரிடுகின்றது. அவருடைய பேச்சு தடிக் கின்றது; அவருடைய மூளையும் நரம்பு மண்டலமும் சிதைவுற்று. அவருடைய உடல் வீழ்ச்சியடைகின்றது ஒரு சில ஆண்டுகளில் அவர் துணையற்ற நிலையினராகி இறுதியில் கருணை மிகக காலன் உலகினை அடைகின்றார். இதுகாறும் இந் நிலைக்கு யாதொரு நோய்நீக்க முறையும் கண்டறியப்பெறவில்லை.

இத்துடன் விட்டுப் போகின்றதா ? ஹண்டிங்க்டன் கோரியா வினை விளைவிக்கும் ஜீனுடன் உள்ள ஒருவர் அந் நோய் அவரைத் தாக்குவதற்கு முன்னதாகத் திருமணம் புரிந்துகொண்டு பல குழவி கட்குத் தந்தையாகவோ அல்லது தாயாகவோ ஆகலாம். இந்த ஜீன் ஓங்கி நிற்கும் இயல்புடையதாதலின், இந்தப் பலியாளின் குழவி களில இருவருக்கு ஒருவர் வீதம் இந் நோய் தாக்குவதை முன்னர் அறியும்வழி தெரியாமலேயே நோயால் தாக்கப்பெறலாம்; அல்லது இந் நோய் அவர்கள் சிலரிடம் வளர்ச்சியடையாமலும போகலாம். அவர்களிடம் இந் நோய் தரும் ஜீன் இருந்துகொண்டு தம்வழி வரு பவருக்குத் தருபவராக இல்லை எனபதும் உறுதிப்படுத்துவதற் கில்லை. இத்தகைய நோயாளர்களின் கால்வழியினர் ஜெர்மெனி, ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலும் காணப்பெறுகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் காணப்பெறும் நோயாளர்களில் ஒரு சிலர் இவர்கள் வழிவந்தவர்களாகவும் இருக்கலாம் என்றும் ஊகிக் கின்றனர்.

ஹண்டிங்க்டன் கோரியாவைப் போலவே இன்று சற்று அரி தாகக் காணப்பெறுவது பிக்கின் நோயாகும். இதுவும் ஓர் ஓங்கி கிற்கும் ஜீனினால் வழிவழியாக இறங்குகின்றது. இந் நோயினால் பீடிக்கப்பட்டோரிடம் இவை அறிகுறிகளாகக் காணபபெறும் : இவர் களின் வாழ்வின் நடுப்பகுதியில் மூளை படிப்படியாகச் சீர் கேடடைந்து வரும். இனிப்புப் பொருள்களின்மீது அளவுக்கு மீறிய ஆர்வம், அமைதியின்மை, வாக்கியங்களைத் திரும்பத் திரும்பக் கூறுதல். சதா கைகளை அசைத்தல் முதலியவை இவர் களிடம் காணப்பெறும் அறிகுறிகளாகும். உடனே இந் நோய்க்குப் பலியாவோர் படுத்தபடியாகக் கருவறையில் இருந்த நிலையைப் போலவே கிடந்து விரைவில் மடிகின்றனர். ஹண்டிங்க்டன் கோரியா