பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 02 வாழையடி வாழை,

தொண்ணுறு வயதிற்கு மேலும் மனநிலை கெடாமல் இருப்பதையும் காண்கின்றோம். எ-டு. ஜார்ஜ் பெர்னார். ஷா, கம நாட்டில் நேரு, இராஜாஜி, பெரியாா ஈ. வெ. ரா. ஆகியோரை எடுததுக் காட்டுகளாகக கொள்ளலாம். இதனால் சிலரது மூளைகள் பிறப் பிலேயே நீண்டகாலம்வரை நன்கு செயற்படுவதற்கேற்ப அமைந்து விடுகின்றது என்று அறிகின்றோம்; ஆய்வாளர்களும் இதே முடி வினையே கூறுகினறனர்.

இறுதியாகக் குடியும். மேக நோயும் பித்தினை விளைவிக் கின்றன என்ற கொள்கையும் தவறு என மெய்ப்பிக்கப்பெற்றுள்ளது. பித்தில்லாத பெருங்குடியர்கள் காணப்பெறுவதாலும், மேக நோய் எல்லோரையும் ஒரேவிதமாகப் பாதிக்காததாலும் இக் கொள்கையும் தவறு என்று அறிகின்றோம். குடியர்கள் பித்தர்களாக இருக் தாலும், மேக நோயாளர்கள் பித்தர்களாகக் காணப்படினும் அந்தப் பித்து அவர்களிடம் குடியினாலோ அனறி மேக நோயினாலோ ஏற் பட்டதன்று. ஏற்கெனவே அவர்களது மூளை பிததிற்கு முன்னிணக்க மாக இருந்தமையால்தான் அவர்கள் பித்தர்களாக மாறினர் என்பது அறியததக்கது. இவற்றாலும் சூழ்நிலைக் கூறுகள் பித்திற்குத் துணை செய்கின்றன என்பது உறுதிப்படுகின்றது. ஆயினும் உள நோய் மருத்துவர்கள் எந்தவித பிததிற்கும் ஏதோ ஒருவகையான மரபுவழிக் கூறு இருத்தல் வேண்டுமென்று நம்புகின்றனர்.

மானிட மூளையில் மரபு வழியாக அடைந்த பல்வேறு குறைகள் பல்வேறுவகைப் பித்தினை விளைவிக்கின்றனவா என்பதை யும் அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை. ஒருவகை உறுப்புக் குறைக் கும் ஒருவகைப் பித்திற்கும் நேர்த் தொடர்பு இருப்பதாகக் கூறுவது எளிதன்று. ஒரு தானியங்கி சரியாகச் செயற்படாததற்குக் காரணம் தீப்பொறியினை விளைவிக்கும் அடைப்புக் கறையாகவும் இருக்க லாம் : அல்லது உருளையில் அடையபு ஏற்பட்டதாலும் நேரிட்டு இருக்கலாமன்றோ ? இதுகாறும் கண்டறியபபெற்ற உறுப்பு பற்றிய குறிப்புகள் இவை : பித்தர்களின் மூளை உயிரணுக்களிலும் சாதாரண மனிதர்களின் மூளை உயிரணுக்களிலும் உள்ள வேற்று மைகள் உயிரியம் இல்லாமை’, விட்டமின் குறைகள், மூளை செயற்படுவதற்கு இன்றியமையாத சில ஹார்மோன்கள் அல்லது