பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் மனமுடையோர் 203

துரைப் புளியங்கள்'* குறைவாக உண்டாதல் ஆகியவையாகும். அண்மையில் மின்சார-என்செஃபலோ கிராம் என்ற கருவியினால் சாதாரண மக்களின் மூளையில் சந்த இயக்க முறையில் மின்சாரத் துடிபபுகள் செல்லுகின்றன என்றும், பித்தர்களின் மூளையில் அத்தகைய ஒழுங்கான துடிப்புகள் ஏற்படுவதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர் இங்ஙனம் துடிப்பு ஏற்படுதலும் குடிவழியைப் பொறுத்துள்ளது என்பதாகவும் அறுதியிட்டுள்ளனர்.

இனி, பல்வேறு பித்து வகைகளை அவற்றின் கொடுமை, பரவி கிலவும் பண்பு இவற்றின் தரத்தின் ஒழுங்கில் எடுத்துக் கொண்டு சற்று விரிவாக ஆராய்வோம்.

உணர்ச்சி விண்ட நிலை : இந்தக் கிரேக் கச் சொல் லுக்குப் ‘பிளவுற்ற மனம்’ (Divided mind) என்பது பொருள். இந்த நோயாளி ஒரு பிளவுற்ற ஆளுமையைக் (Split personality) கொண்டு இருப்பார்; இவருடைய மனச் செயல்கள் சாதாரணமாக வும் அசாதாரணமாகவும் உள்ள நிலைகட்கு இடைப்பட்டிருக்கும். இக் நோய் கண்டவர்கள் உடல் மெலியும் ; உடல் நலம் குன்றும். இங் நோயின் முக்கிய அறிகுறி வாழ்க்கை உண்மைகளினின்றும் பின் வாங்குதல் ஆகும் கூச்சம், பயங்கொள்ளித்தனம், பிறரை விட்டுத் தனியே இருக்கும் தன்மை, வெளியுலகச் செயல்களில் பற்றில்லா திருத்தல், மிகக் களிபேருவகை கொண்டிருத்தல், வலிப்பு நோய் கொண்டிருத்தல், சில சமயம் தற்கொலைக்கு முயலுதல், சில சமயம் மந்த நிலைக்குப் போதல் போன்ற தன்மைகள் இந் நோயாளர் களிடம் காணப்பெறும். இந் நோய்வாய்ப்படுவோர் வெளியுலகத்தை மறந்து தங்களது கனவுலகத்தில் வாழத் தொடங்குவர்.

பித்து நோயினை முக்கியமாக நான்கு வகைப்படுத்திக் கூறுவர். அவை பாரானாய்ட்’ பித்து நோய், எளிய பித்து நோய், கேட்டோனிக்”

14. நுரைப் புளியம் - Prizwme, 15. மின்சார என்செஃப்லோ கிராம் - Electro-encephalo

16. a sworf&# 60sort floosu - Schizophrenia 17. Paronoid. ! 8. Catonic.