பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வாழையடி வாழை

பித்து நோய், ஹெபிஃபி ரெனிக்” பித்து நோய் என வழங்கப்பெறும். பாரானாய்ட் பிதது நோயின் அறிகுறிகள் பொய்த் தோற்றம் பொய் எண்ணங்கள் ஆகும. எவரும் எதிரில் இல்லாதபோதும் இவர்கள் பேச்சில் ஈடுபட்டிருபபர். தங்களைப்பற்றி உயர்ந்த எண்ணங்கொண் டிருப்பர். அந்த உயர்ந்த நிலையிலிருந்து மற்றவர்கள் தங்களை ஒழித்துவிடச் சதி செய்கின்றனர் என்ற பொய் எண்ணத்தினால் அவதியுறுவர். எ-டு. இரண்டாம் உலகப் பெரும் போர்க்காலத்தில் குதிகொடைமூலம் ஸ்காட்லாந்து நாட்டில் இறங்கிய ரூடால்ஃப ஹெஸ்’ இந்த நோய்வாய்பபட்டிருந்ததாகக் கருதபபெறுகின்றார்.

எளிய பித்து நோயின் முக்கியமான அறிகுறி வாழ்க்கையில் விருப்பு இன்மையாகும். மனிதர்கள் மேலும் பொருள்கள மீதும் பற் றற்று இருப்பர். இந் நோயாளர் பிறருடன் பழகத் தெரியாது நாடோடியாகத திரிந்துகொண்டிருபபர்.

கேட்டோனிக் பித்து நோய் மிகவும் கொடுமையானது. ஆனால் மற்ற உள நோய்கள் போன்று மக்களிடம் அதிகமாகக் காணப்பெறுவதில்லை. இக் கோ யா ல் பீடிக்கப்படுபவர்கள் முரணாகச் செயலாற்றும் ( wont attitude) போக்குடைய வர்கள்.

ஹெபி.பிரெனிக் பித்து நோயார் குழந்தை போன்று சிரிப்பதும் கடப்பதுமாக இருப்பர். இவர் தம் மெய்ப்பாடும் உணர்ச்சியும் சந்தர்ப்பத்திற்கேற்ப இராது. எ-டு. இந் நோயுடையவன் தன் தந்தையின உயிருக்கு நோந்த விபத்தைச் சிரிததுக்கொண்டே விவரிப்பான். மன நோய்களில் இதுதான் மிகக் கொடுமையானது. இஃது அதிகமாகப் பரவியுள்ளது எனபது மடடிலும் இதற்குக் காரணம் அன்று. இதனைச் சிகிச்சையால் போக்குவது கடினமானதாலும், இது கொடுமையான குற்ற நடத்தைக்கு இழுத்துச் செல்வதாலும், இளமையில இது தாக்கி அதிகமானவர்களைக் கொல்வதாலும் இது விகவும் கொடுமையான நோயாகின்றது.

19. Hebephrenic. 20. Rudoph Hess.