பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 வாழையடி வாழை

மரபுவழியாக இறங்கும் முறை, சிகிச்சைக்கு ஏற்கும் தன்மை இவற் றில் மாறுபடுகினறது. கிளர்ச்சியும் சோர்வும் மாறிமாறி வருவதால் இஃது வீறுச் சோர்வு’ எனப் பெயர் பெற்றது. இந் நோயின் வீறு குறைநத நிலையில், அல்லது இந் நோய் வீறு குறைந்த வடிவில் உள்ள பொழுது நோயாளர்கள் அளவுக்குமேல் மகிழ்ச்சி கொள்ளுவர் : அல்லது அளவுக்குமேல் சோர்வுற்றிருபபர் கிளர்ச்சி மிக்கு அதிகமாகப் பேசுவர் : சாதாரண வேலைகளிலிலும் சமூக உறவுகளிலும் அமைதியாகப் பங்கு பெறுவதில் சங்கடப்படுவர். இந்த நடத்தை எல்லைமீறிப் போகும்பொழுது இவர்கட்கு மருத்துவ மனை வாழ்க்கை தேவைப்படுகின்றது. இந் நோய் விரைவில் குணப்படுகின்றதெனினும், சில நெருக்கடி நிலைகள் நேரிடுங்கால் திடீரென்று மீண்டும் தோன்றிவிடுகினறது.

இந் நோய் சாதாரணமாக முதிர்ச்சியடையும் பருவம், வாழ்க்கை வின் நடுப்பகுதி, சில சமயம் கிழப் பருவம் அல்லது இருபது வயதினை எட்டும் பருவம் ஆகிய பருவங்களில் வருகின்றது : ஆனால் பித்து நோயைபபோல் இளமையில் எப்பொழுதுமே வருவ தில்லை. ஆனால் பிதது நோயைப் போலவே தீங்குள்ள சூழ்நிலைச் செல்வாக்குகள் இது வருவதில் பங்கு பெற்றால், இது வருவதற் குரிய முனனிணக்கம் மரபு வழியாக இருத்தல் வேண்டும். இங்கும் இரட்டைப் பிறவிகளின் ஆராய்ச்சி குறிப்பிடத்தக்கவாறுள்ளது. ஒரு கரு இரட்டைக் குழவிகளில் ஒன்று வீறுச் சோர்வுடனிருப்பின், பெரும்பாலும் மற்றொன்றும் அங்ஙனமே இருத்தல் வேண்டும். ஆனால் இரு கரு இரட்டைக் குழவிகளிடம் அங்ஙனம் காணப் பெறுவதில்லை : அக குடும்பத்தில் வேறு ஏதாவது இரண்டு குழவி களிடம் அந் நோய் இருப்பது எப்படி உறுதியில்லையோ அப்படியே இவற்றிடமும் உளளது. பித்து நோயைப் போலவே இந் நோயிலும் இறப்பியல் பொறி நுட்ப அமைப்பு இதுதான் என்பது உறுதியாக இல்லை. எனினும், பித்து கோயிலுள்ளதைப் போலவே வீறுச் சோர்வு கிறுக்குத் தன்மைககுரிய முன்னினககம் (Predisposition) பாதி ஓங்கி நிற்கும் ஜீனின் மூலமோ அல்லது ஒழுங்கற்ற ஓங்கி கிற்கும் ஜீன்கள் மூலமாகவோ மரபுவழியாக இறங்கலாம். இத்

21. Sopi Garrs, - Manic depression.