பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வாழையடி வாழை,

இத்தகைய பயமுறுத்தல் இருப்பின் அதனை உறுதிப்படுத்துவதற்கு அதிகக் காலம் காத்திருந்து பார்க்க வேண்டும்.

உள நோய் ஆளுமை :’’ அண்மைக் காலத்தில் மனத்தின் கல்லுணர்வு நிலைக்கும் கிறுக்கு நிலைக்கும் இடைப்பட்ட ஒரு தெளிவான ஒரு மன மாறாட்ட நிலை இருப்பதாகக கண்டறியப் பெற்றுள்ளது. இந் நிலையும் தீங்கு பயக்கக் கூடிய நிலையாகும். ஏனெனில் இந்த ஆளுமையையுடையோர் உண்மையில் மன நோயால் பீடிக்கப்பெற்றிருப்பினும், அவர்கள் பிறரால் சரியாக அறிந்துகொள்ளப் பெறுவதில்லை. சாதாரணமாக இவர்கள் அன்பற்றவர்களாகவும், சுயநலக்காரர்களாகவும், உள்ளக் கிளர்ச்சி முதிர்ச்சியடையப்பெறாத வழக்கத்திற்கு மாறானவர்களாக'வும் காணபபெறுவா , அவர்கள் வாழ்க்கையில் எண்ணற்ற துயரங் களையும். பெரும்பாலும் குற்றச் செயல்களையும் புரிபவர்களாக இருப்பர்.

இத்தகைய ஆளுமையைக் கொண்ட நோயாளர்கள் அடிப் படையில் முதிர்ச்சியடையாத நிலையிலிருப்பர் என்றும், தனியான மன உலகில் வாழ்பவர் எனறும், யாரிடமும் எந்தப் பொருளிடமும் பற்றிலலாத நிலையிலிருபபர் என்றும், கட்டுபபாட்டை எதிர்ப்ப வர்கள் என்றும். பொய் சொல்ல அஞ்சார் என்றும். பொருள்களைப் பெறுவதில் குழந்தைகளைப் போலவே கல் மனததுடனும் பிடுங்குக் தனமையுடனும் செயற்படுவர் என்றும், தாங்கள் விரும்புவது கிடைக்காவிடில் வெடுவெடுப்பான நிலையை அடைவர் என்றும் உள நோய் மருத்துவர்” அடையாளங் கூறுகின்றனர். எல்லா அறிதிறன் கிலைகளிலும் இத்தகையோர் காணப்பெறுவர். இவாகள் கூர்த்த மதியுடை யவர்களாகவும், பேரறிவுடையவாகளாக வும் இருப்பர். தங்கள் செயல்களால் பெருஞ் சிறப்பினையும் எய்துவர். ஆடாலஃப் ஹிடலர் மிகத் தீவிர அளவில் இத்தகைய ஆளுமையை யுடையவர் என்றும், ஹெர்மன கோயரிங் குறை நிலையில் இததகைய ஆளுமையையுடையவர் என்றும் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

22. go_6m (357 tij sab@jsoto - Psychopathic personality. 23. -6IT G5m t tn(E);#gl6u - Psychiatrists.