பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் மனமுடையோர் 209

பெரும்பாலான கொள்ளைக் கூட்டத்தினரும், குற்றம் புரிவோரும், ஏமாற்றிய பணம் பறிப்போரும், இத்தகைய ஆளுமை நோயுடைய வர்களே. எனினும், இத்தகைய நோயாளர்களின் வழக்கத்திற்கு மாறான ஆற்றல்கள் சிறந்த அறிவு நுட்பத்துடன் கலந்து படைபபுச செயல்களில் திரும்பினால் அவை மிகப் பெரிய அருஞ் செயல்களை விளைவிககும். ஆய்வாளர்கள் வால்ட்டயர் என்போரை இதற்கு எடுத்துககாட்டாகக் கூறுகின்றனர்.

இந் நோயாளர்களைப்பற்றி இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை. இந் நிலை குழவிப் பருவத்திலிருந்தே இருப்பதாலும் இது வழக்கத்திற்கு மாறான செயலால் இதற்கு விளக்கம் தர முடியாததாலும், சூழ்நிலையில் மாற்றம் இருந்தாலும் இந் நிலையில் யாதொரு மாற்றமும் காணப பெறாமையாலும் பல உள நோய் மருத்துவர்கள் இதில் மரபுவழிக் கூறு இருபபதாகக் கருதுகின்றனா. எனினும், கால்வழி யியல்பற்றிய ஆராய்ச்சி களால் மரபுவழிப் பொறி நுட்பத்தைப்பற்றி இதுகாறும் யாதொரு திட்டமான முடிவும் கண்டறியப்பெறவில்லை.

வா.-14