பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 27

மந்த மனமுடையோர்

மக்களிடம் உடல் வளர்ச்சியில் வேறுபாடுகள் காணப் பெறுவது போலவே உள வளர்ச்சியிலும் வேறுபாடுகள் காணப் பெறுகின்றன. பெரும்பாலோர் தேவையான அளவு உள வளர்ச்சி பெற்று வாழ் கின்றனர். ஆனால் ஒரு சிலர் உளவாற்றல் குறைவுடையவர் களாகக் காணப்படுகின்றனர். தொன்று தொட்டு மக்களைப் பேதையர், சாதாரணமானவர், மேதையர் என்று குறிப்பிடுங்கால் அநுபவ வாயிலாகவே குறிதது வந்தனர். அறிதிறன் சோதனைகள்’ கண்டறியப்பெற்ற பிறகு மக்களை அறிதிறன் கொண்டு அறிவியல் முறையில் வகைபபடுத்த முடிகின்றது. இதில் அறிதிறன் ஈவு” பெருந்துணை புரிகின்றது. சராசரி மனிதனின் அறிதிறன் ஈவு 90லிருந்து 1 10 வரையிலிருக்கும்; மேதையரின் அறிதிறன் ஈவு 140க்கு மேலும் பேதையரின் (உளவாற்றல் குறைவுடையோரின்) அறிதிறன் ஈவு 90க்குக் குறைவாகவும இருக்கும். இதுபற்றிய விவரங்களை உளவியல் நூல்களில் கண்டு தெளிக.*

உளவாற்றல் குறைவு என்பது என்ன ? ஒருவன் போதுமான

அளவு திறமையுடனும், பொருத்தத்துடனும் தனனுடைய சமூகச் சூழ்நிலைக்குத் தக்கவாறு கடந்து கொள்ள முடியாதவனாகவும்

1. of poor Gorgosor&sir - Intelligence tests.

2. of psr Ross - Intelligence quotient.

e சுப்பு ரெட்டியார், ந: கல்வி உளவியல். பக்கம் (288-297) பா : க் க. (வெளியீடு : எஸ். வாசன் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை-4.)