பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 வாழையடி வாழை

களைத் தவறாக இனம் வகுக்க நேரிடும் என்பதை மேற்குறிப்பிட்ட படிமுறை அளவீடுகளை” உற்று நோக்கினால் புலனாகும். பல்வேறு நிலைகளில் சோதிக்கப்பெறும் தனியாள் விடையிறுப்பதில் வேறு படினும், அல்லது சோதகர் சிறிய தவறு செய்யினும் அறிதிறன் ஈவில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுப் பேதை இனத்தில சேர்க்கப் பெறுவதற்குப் பதிலாக கனி பேதை இனத்திலும், அல்லது “சாதாரண மந்தர்’ இனத்தில் சேர்க்கப்பெறுவதற்குப் பதிலாக பேதை இனத்திலும், அல்லது சாதாரண மனிதர்’ இனத்தில் சேர்ப்பதற்குப் பதிலாக மந்தர்’ இனத்திலும் சேர்க்கப்பெறுதல் கூடும் என்பது தெளிவாகின்றதல்லவா ? இதைத் தவிர, இச் சோதனைகள் எங்ஙனம் அடிப்படை அறிதிறனை அளத்தல் கூடும், சூழ்நிலைக் கூறுகளைச சமாளிகக என்ன தள்ளிக் கணிப்புகள்” மேற் கொள்ளப்பெற்றுள்ளன என்ற வினாவும் எழுகின்றது. இவை போன்ற பிற ஐயங்களும் உள்ளன. இவை யாவும் மனக் குறைபாடுகள் மரபுவழியாக இறங்கும் பண்பினை நிலை நாட்டுவதில் பல சிக்கல்களை உண்டாக்குகின்றன.

இந்த இடர்ப்பாடுகள் ஒருபுறம் இருப்பினும், மனக் குறை பாடுள்ளவர்களுள் பெரும்பான்மையோரை உண்டாக்குவதில் மரபு நிலை நேராகப் பொறுப்பாகின்றது, அல்லது முக்கியமான பங்கினைப் பெறு கின்றது என்பதற்கும் இந்த மந்த மனமுடையோர்களில் 40 சதவிகிதத் திற்குக் குறைவானவர்களே அநேகமாக முற்றிலும் சூழ்நிலைக் கூறுகளால் இந் நிலையை அடைந்திருககக் கூடும் என்பதற்கு சரியான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஒருவகை மனக் குறையுடையோரை உண்டாக்குவதற்குக் காரணமாகவுள்ள கூறுகள் பிறிதொரு வகை மனக் குறைவுடை யோரை உண்டாக்குவதில் பங்கு பெறுவது அரிதாக இருப்பதனால் ஒவ்வொரு வகை மனக் குறைவுடையோரைப்பற்றியும் தனித்தனி யாக ஆராய்வது மிகவும் இன்றியமையாதது. தொடக்கத்தில் இக் குறிப்பு கவனிக்கப்பெறவில்லை. பேதையர், நனி பேதையா,

7. Lisbopistop sorG56ir - Evolutionary test, 8. அடிப்படை - basic. 9. தள்ளிக் கணிப்புகள் - Allowances.