பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. வாழையடி வாழை

இவர்களுடைய நிலையை விளக்கும் உடலமைப்புபற்றிய குறைகளோ அல்லது நோயின் அறிகுறிகளோ இருப்பதில்லை. இன்று நாம் அறிந்த வரையிலும் இவர்களுடைய மனக் குறைக்குக் காரணம் இவர்களுடைய மூளை செயற்படுவதில் காணப்பெறும் அடிப்படை வேகக் குறைவேயாகும். உடலமைப்புநிலையில் குட்டை நிலையி லிருந்து உயரமான நிலை வரையிலும் அமைவது போலவே, மன நிலையிலும் தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த நிலை வரையிலும் காணப்பெறுவது இயல்பே என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், முட்டாள்கள், நனி பேதையர் இவர்களிடம் உள்ள நிலை போலன்றிப் பேதையர் உண்டாவதற்குரிய கூறுகள் மரபு நிலை பற்றியிருப்பினும் சூழ்நிலைபற்றி அமையினும் அவை சாதாரண மானவை; எங்கும் பெரு வழக்காக இருப்பவை. ஆயினும் ஊட்டக் குறைவு, பல்வேறு வகை நோய்கள், படிக்க முடியாத குறைபாடு, கேள்வி அல்லது பிற புல-இயக்கக் குறைகள், உள்ளக் கிளர்ச்சிக் குலைவுகள், போதுமான பயிற்சியில்லாமை ஆகிய இவையும் ஒரு சிலர் பேதையராவதற்குக் காரணங்களாகும். வாழ்க்கை வசதிகளும், மருத்துவ வசதிகளும கல்விப் பெருக்கமும் அதிகரித்து வருவதால் இந் நிலை குறைந்து வருகின்றது.

எனவே, முட்டாள்களும் கனி பேதையரும் தோன்றுவதற்குரிய கூறுகள் எவையாக இருப்பினும், அவை பேதையர் தோன்றுவதற் குரிய கூறுகளிலும் வேறானவை என்றும், அவற்றுடன் சர்பில்லாதவை என்றும் அறியக் கிடக்கின்றன. அ.தாவது, பெற்றோர்களின் அறிதிறனைப் பொறுத்தேயன்றி ஒரு குடும்பத்தில் முட்டாள்களும் கனி பேதையரும் தோன்றலாம் க | ர ண ம் என்னவெனில், ஏற்கெனவே நாம் குறிப்பிட்டதுபோல், அவர்கள் ஏதோ மொத்தத்தில் முழுதும் தழுவிய இயல்பிகந்த தன்மையின் விளைவேயன்றிக் குறை பாடுள்ள ‘அறிதிறன்’ ஜீன்களின் விளைவு அன்று. ஆனால், பேதையர்களில் பெரும்பாலோர் குறைபாடுள்ள மனம் பற்றிய’ ஜீன்களின் நேரான விளைவாக உள்ளனர். ஆகவே, அவர்கள் சாதாரண அறிதிறனைக் கொணட குடும் பங்களைவிடத் தாழ்ந்த அறிதிறனுள்ள குடும்பங்களில் அதிகமாகத் தோன்றுவதற்கு ஏதுவா கின்றது. இந்த இரண்டு குழுவினருக்குரிய வேறுபாட்டை இன் னொரு விதமாகவும் வற்புறுததி விளககலாம். பொதுவாக மிக்க