பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த மனமுடையோர் 2 15

அறிவு படைத்த இரண்டு பெற்றோர்களிடம் ஒரு முட்டாள் குழந்தை பிறக்கலாம்; இரண்டு பேதைப் பெற்றோர்களிடம் இத்தகைய ஒரு குழந்தை பிறக்காதும் போகலாம். முட்டாள் குழவி தோன்று வதற்குச சாதகமான நிலை தேவைப்படுகின்றது. இதன் காரண மாகத்தான் தாழ்ததப்பட்ட சமூகங்களில் தாழ்நிலை அறிதிறன் உள்ள குடும்பங்களில் இரண்டு குறைபாடுள்ளவர்களின் கலவியும் பாதகமான சூழ்நிலைக் கூறுகளும் சேரும்பொழுது சேர்ந்தாற்போல் பல்வேறு வகை மனக் குறைபாடுடையோர் தோன்றும் நிலை அதிகமாவதைக் காண்கின்றோம். மேனாடுகளில் மேற்கொள்ளப் பெற்ற பல ஆராய்சசிகள் இந்த உண்மைக்கு ஆதரவு தருகின்றன.

பேதையர்களை மட்டிலும் எடுத்துக்கொண்டால் அடியிற் கண்ட உண்மைகள் புலனாகின்றன.

1 75 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பேதையர் கிட்டத்தட்ட 10 சதவிகித மக்கள் தொகையில் மிக அதிகமான மனக் குறை பாடுடைய குடும்பங்களிலேயே தோன்றுகின்றனர்.

2. ஒரு குடும்பத்தில் பெற்றோரில் ஒருவர் பேதையராக இருப்பின் அக் குடும்பத்தில் சராசரி ஐவருக்கு ஒருவர் வீதம் பேதையராகப் பிறப்பதற்கு வாய்ப்பு நேர்கின்றது.

3. பெற்றோர் இருவரும் பேதையராக இருப்பின் அவர் களுக்குப் பிறககும் குழவிகளில் 60-75 சதவிகிதம் மனக் குறை வுடையோராக அமைவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

4. ஒரு கரு இரட்டையர்களில் ஒரு குழந்தை பேதையாக இருப்பின் மற்றொன்றும் அங்ஙனமே உள்ளது. ஆனால் இரு கரு இரட்டையாகளில் 50 சதவிகிதத்திற்குக குறைவுள்ளவர்களிடையே மட்டிலுந்தான் இந் நிலை தெனபடுகினறது.

ஆனால் இவற்றாலும் வேறு சில மெய்ம்மைகளாலும், பேதை யரின் தோற்றத்திற்கு எத்தகைய ஜீன்கள் பொறுபபாக உள்ளன என் பதைக் கால்வழியியல் நிபுணர்கள் இன்னும் உறுதிப்படுததவில்லை. பேதையர் நிலையில் மன ஆற்றல் குறைவு ஏற்படுவதில் ஓர் இணை பின்