பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் :

வாழையடி வாழை

ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் உயிர்கள் உண்டாகி உடல் தாங்கி உருப்பெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த உயிர்களின் உடல் பெரிதாகிய பல ஆண்டுகள் வாழ்ந்து தன் இயற்கைக் கடனை ஆற்றி, தன் இனத்தைப் பெருக்கி முதுமை அடைந்து அழிந்து பழையபடியே ஐம்பெரும் பூதங்களாகவே மாறிப் போகின்றன என்பதும் நமக்குத் தெரியும், இங்ஙனம் தொடர்ந்து நடைபெற்றுவரும் உயிர்ச் சக்கரத்தின் இயற்கை கியதியை உன்னுந்தோறும் நம்மை வியப்புக் கடலில் ஆழ்த்துகின்றதன்றோ ? இங்ஙனம் இயற்கை அன்னை புரிந்துவரும் திருவிளையாடல்கள் எண்ணற்றவை. எந்த எல்லைக்குள்ளும் அடங்காதவை. படைப் பின் விந்தைகள் ஒன்றா ? இரண்டா ? எத்தனையோ ?

பார்வதியின் குழந்தையைப் பார்த்தாயா ? த க் ைத ைய அப்படியே உருக்கி வார்த்து எடுத்து வைத்ததுபோல் உள்ளது’ என்று அடுத்த வீட்டுப் பாட்டி சொல்வதைக் கேட்டிருக்கின்றாேம். “தாய்க்கு இருப்பன போலவே பெரிய கண்கள். நிறமும் அவளைப் போலவேதான். மூக்கும் மேல்வாய்க் கட்டையும் தந்தையினுடைய வற்றைப்போல் அமைந்துவிட்டது!'-இப்படிப் பேச்சு கடக்கின்றது இன்னொரு வீட்டில்.

‘குழந்தையின் மூக்கைப் பார்! அப்படியே அப்பாவின் மூக்கை உரித்து வைத்தது மாதிரி உள்ளது. கருவண்டுகளைப் போன்ற கண்களைப் பார். அம்மாவின் கண்களைப் போன்றே அமைந் துள்ளன. சுருட்டைத் தலைமயிர் பாட்டியினுடையதைப்போல் அல்லவா இருக்கின்றது ?’ இங்ஙனம் பிறந்த குழவியைப் பார்த்து