பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 0 வாழையடி வாழை

என்றும் நாம் அறிவோம். இஃது அடிப்படையில் சரியே. ஆனால் வேறு மானிட இயல்புகளில் நடைபெறுவதைப் போல, பால் அமைப்பிலும் வேறு சில கிறக் கோல்கள செல்வாக்கு பங்கு பெறு கின்றது. இவற்றையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

X, Y நிடக் கோல்கள் மட்டிலும் பாலை அல்லது பாலியல்புகளை அறுதியிடும் கூறுகளன்று. இவை ஏதோ ஒரு வகையில் ஆணாகவோ பெண்ணாகவோ அமையும் செயலைத் தொடக் கும் முக்கியமான ஜீன்களைக் கொண்டிருப்பினும், இரு பாலாரிடமிருந்து பெறும் வேறு கிறக கோல்களிலுள்ள பாலில்-செல்வாக்கு தரும் (Sex. influencing) ஜீன்களும் உள்ளன எனபதை நாம் அறிதல் வேண்டும். இதையும் மேற்குறிப்பிட்ட இயலில் முன்னரே தெரி வித்துள்ளோம். எப்படியிருந்தபோதிலும் எல்லோரும் தொடக்கத்தில் ஏதாவது ஒருவகைப் பாலியல்புகள் அமைவதறகு வேண்டிய ஆற்றலியல்பு களைத் (Potentialitics) தம்மிடம் கொண்டுள்ளனர். குழந்தை பிறபபதற்கு முன்னுள்ள கரு நிலையின் தொடக்கக் காலங்களில், ஒரே மாதிரியான பால் சுரப்பிகளும், ‘ஆண் தன்மை’ (Maleness) யையும் பெண் தன்மை’ (Femaleness) யையும் விளைவிக்கும் வளர்ச்சியடையாத நிலையிலுள்ள பாலுறுப்புகளும் இருபாலாரிடை யேயும் இருபபதை நாம் காணலாம். இந்த நிலையினின்றுதான் பால் அறுதியிடும் செயல் அடியிற் கண்டவாறு நிகழ்கின்றது.

சாதாரண கிலையினுள் XY கிறக் கோல்களமைந்த குழவி யிடம் ஆண் தன்மையை’ விளைவிக்கும் உறுப்புகளும் பாலியல்பு களும் முழுநிலை அடையும் வரையிலும் படிபபடியாக வளர்ச்சி பெறுகின்றன. இப்பொழுது ‘பெண் தன்மையை’ விளைவிக்கும் உறுப்புகளும் பாலியல்புகளும் வளர்ச்சி பெறாத நிலையில் உள்ளன. இங்ஙனமே சாதாரண நிலையிலுள்ள X X கிறக் கோல்களமைந்த குழவியிடம் பெண் தன்மையை’ விளைவிக்கும் உறுப்புகளும் பாலியல்புகளும் முழுநிலையை எய்தும்வரையிலும் படிபபடியாக வளர்ச்சி பெறுங்கால் ‘ஆண் தன்மையை’ விளைவிககும் உறுப்பு களும் உடலியற் கூறுகளும் அழுந்திய நிலையிலேயே உள்ளன. ஆனால், கருவுற்ற நிலையிலிருந்து இங்ஙனம் படிப்படியாக வளர்ச்சி பெறும் நிலையில் ஏதோ ஓரிடத்தில் இச் செயலில் ஏதோ ஒரு