பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 வாழையடி வாழை

மனைவி யாகி மகவீன்று

மாய வாழ்க்கை நடத்துமால்

சின்னஞ் சிறிய எழிற்சிப்பி

சீரார் தாயாய்த் தந்தையாய்

மன்னும் இனிய சோதரனாய்

மகிழ்சோ தரியாய் மாறுதம்மா !

இரட்டை வாழ்வைச் சிறுசிப்பி

இசைந்து வாழ்தல் உண்மையெனில்

மருட்டும் சிப்பி தன்னுணவில்

மாய்ந்து போதல் வியப்பாமோ.”

இங்ஙனமே இரண்டு பால் தன்மைகளையும் பெற்றுள்ளது ஜைனான்ட்ரோமார்ஃப்’ என்று வழங்கப்பெறும் “அர்த்த-காரி’ என்ற திடீர் மாற்றம் அடையும் உயிரியாகும். இதனிடம் உடலின் ஒரு பாதி ஆணாகவும ஒரு பாதி பெண்ணாகவும் இருக்கும். அல்லது. சில சமயம் அது மேற்பாதி ஆணாகவும் கீழ்ப்பாதி பெண்ணாகவும் அல்லது இரு நிலை நேர் மாறாக மாறியும் இருக்கும். பெரும்பாலும் முதுகெலும்பிலிகளிடமே காணப்பெறும் இததன்மை, சாதாரணமாக வண்ணதது.ப பூச்சிகள். அந்துப் பூச்சிகள், குளவிகள், தேனீக்கள், ஈக்கள், எறும்புகள். சிலந்திப் பூச்சிகள் இவை உட்படப் பலவகை உயிரினங்களிடையே தெளிவாகக் காணப்பெறுகின்றது.

கருவுற்ற பின்னர் உயிரணு பிரியும் முதல் நிலைகளில் பின்னர் பெண்ணாக அமையவேண்டிய கருவில் X-நிறக் கோல்களில்

2. இஃது அடியிற்கண்ட ஆங்கிலப் பாடலின் அடியொட்டி

எழுதப்பெற்றது.

The oyster leads a double life

One year, its husband, nextyear, wife

It’s both a father and a mother ;

It’s both a sister and a brother

No wonder, if all this is true,

The oyster ends up in a stew.