பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுங் கெட்டான்கள் 223

ஒன்று ஒழுங்கு தவறிவிடுவதாலோ அல்லது ஏதோ ஒரு முறை யில் இழக்கபபெறுவதாலோ அர்த்த நாரி உயிரி உண்டாக்கப் பெறுகின்றது.

மனிதர்களிடம் இத்தகைய வினோதமான நிலை எங்ஙனம் பொருந்துகின்றது? நம்முடைய உள்ஸ்ரீப்புகளைப்போல் சரியான முறையில் தொடர்புகொள்ளப்பெறாததும் ஹார்மோன் செயல் குறைவாக வுள்ளதுமான பூச்சிகள் போன்ற தாழ்ந்த உயிரினவகை களில்தான் உண்மையான அர்த்தகாரி உயிரிகள் உண்டாகின்றன. மானிட உயிரிகளிடமும் அல்லது பாலுண்ணிகளிடமும் பாலகிறக் கோல்களின் குலைவு ஏற்படும்பொழுதும், உடல்முழுதும் சுற்றிவரும் பால்கிறக்கோல்கள் முழுவதும் ஒருவகையான ‘கலப்புகய’ விளை வினை உண்டாக்குகின்றன. வட்ட அரங்கில்” வேடிக்கை நிகழ்ச்சி களில் பங்குபெறும் ஒருசிலர் தம்மை அர்த்தகாரிகள்’ என்று சொல்லிக்கொள்வது உண்மையன்று போலியான உருவங்கள் அவை. (பெரும்பாலும் இவர்களிடம் ஒரு பக்கத்து மார்பு (கொங்கை) மட்டுமீறிய பெருததும் மற்றொன்று சாதாரணமான நிலையிலும் இருப்பதனால் இங்ஙனம் கினைக்க இடந்தருகின்றது.)

இங்ஙனம் மனிதர்களிடம் பல்வேறு படிநிலைகளால் இரு பாலாரின் உறுப்புகளைக் கொண்டிருத்தல் அல்லது இருபாலாரின் இடைநிலைப் பண்புக்கூறுகள் (கொங்கை வளர்ச்சி, உடல வளர்ச்சி, முகத்திலும் உடலிலும் மயிர்ததோற்றம் முதலியவை) காணப் பெறுதல்போன்ற ‘இருபாலுக்கிடைப்பட்ட நிலைகள்’ நிகழ்கின்றன. சரியாக வளர்ச்சிபெறாத ஆண்பிறப்புறுபபுகளையும் பல்வேறு படி நிலைகளில் பெண்பிறப்புறுப்பு வளர்சசியினையும் கொண்ட ஆண் களும், அங்ஙனமே சரியாக வளர்ச்சிபெறாத அல்லது முழுநிலை பெறாத பெண்ணுறுப்புகளையும் அடிப்படை நிலையிலுள்ளஅல்லது சிலசமயம கனகு வளர்ந்த-ஆணுறுப்புகளையும் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

3. வட்ட அரங்கு - Circus.

4. _இருபாலுக்கிடைப்பட்ட நிலை - ‘intersexual condition.