பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 வாழையடி வாழை

உண்மையான இருபாலினர்-அஃதாவது காமச்சுரப்பிகள்,” பால் உறுபபுகள், இருபாலினரின் சிறப்பியல்புகள இவற்றுடன் கூடிய முழுநிலை, இரண்டுங்கெட்டான் நிலை- இருப்பது மிகவும் அரிது. இதுகாறும் மருத்துவ ஏடுகளில் இத்தகையோர் நாற்பது பேர்தாம் இடம்பெற்றுள்ளனர். இருபாலினரின் இளஞ்சூல் நிலை யில் ஆண்தன்மை'யையும் பெண்தன்மை'யையும் விளைவிக்கும் வளர்ச்சியுறாத பால் - சுரப்பிகளும், பால் - உறுப்புகளும் காணப் பெறின், அந்த இரண்டு பால் பொறியமைப்புகளுள் சாதாரணமாக ஒன்று மற்றதைவிட முந்திய வளர்சசி பெறுவதற்குப் பதிலாக இரண்டும் சரிசம வளர்ச்சி பெறுகினறன. யாதோ ஒருவகை நிலை குலைவினால் இங்ஙனம் மூன்று-கால்’ ஓட்டம்போல் (Tie race) ஒரே வேகமான ஓட்டம் நிகழ்கின்றது. ஆனால் இதுகாறும் மனித இனத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இயங்கி இனபபெருக்கம் செயது உயிரியை நாம் கண்டதுமில்லை; அததகைய ஓர் உயிரி மருத்துவப் பதி வேடுகளில் இடம்பெறவும் இலலை.

தொடக்கத்தில் பாலை அறுதியிடும் செயலில் அல்லது பால்

வளர்சசியில் அரைகுறை நிலைகுலைவு ஏற்பட்டால், ஆயிரத்தில் ஒன்றுவீதம் போலி-இருபாலிநிலை’ அல்லது சரியாகச் சொன்னால் ‘இருபாலிக் கிடைபபட்டங்லை ஏற்படுவதைக் காண்கின்றோம். இந்த நிலையிலுள்ளவரிடம் சூற்பைகள் அல்லது விரைகள் - இரண்டும் இல்லை-காணப்பெறும; ஆனால் இருபாலினருக்குரிய புற-பாலுறுப்புகள் இருக்கலாம். சாதாரணமாக இவற்றுள ஒருபாலி னருககுரிய உறுப்புகள் மேம்பட்ட நிலையிலிருக்கும். எனவே, கால்வழி இயல்” அடிப்படையில் ஆணாகவோ அல்லது பெண் ணாகவோ இருக்கும் இருபாலினரின் குழவியபருவததில் அல்லது

5. @(GL1T6B6orf – Hermaphrodite.

6. 5rupdrr'l) 56ii - Sex-glands.

7. Guto-sool sirfisosu - Pseudo-her maphroditism,

8. Gsol 1356r – Ovaries.

9. 6?subT356ir - Testes.

10. ET6.jps Qub - Genetics,