பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுங் கெட்டான்கள் 225

பிள்ளைப்பருவத்தில் தவறாக இனம் வகுக்கப்பெறுதல்கூடும். இத் தகையவர்தாம் அடிக்கடி செய்தித்தாள்களில் பெரிய எழுத்துகளில் வெளியிடபபெறும் விறுவிறுப்பான செய்திகட்குக் காரணமா கின்றனா! ஒருசமயம் செக்நாட்டு மங்கையொருத்தி 1935இல் ஒலிம்பிக் விளையாட டு விழாவில் 800 மீட்டர் ஒடடப் போட்டியில் முதலிடம் பெற்ற ‘மங்கை’ உண்மையில் ஓர் ஆண் போலிஇருபாலியே. அதன் பிறகு அறுவை சிகிச்சையின் மூலம்அவள் அடிவயிற்றில் புதைந்துகிடந்த ஆணுறுப்புகள் வெளிப்படச் செய்யவே அவள் ஆணானாள். அடுதது 1936இல் இங்கிலாந்து நாட்டில் பெரும் புகழ்பெற்ற பெண் உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவர் குண்டெறிகை, ஈட்டி எறிகைப் பநதயங்களில் குறிப் பிடத்தக்க உசச எல்லைகளை அடைந்துகொண்டேயிருந்தார்: அவரும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆண்’ என்பதாகத் தெரிந்தது. அதனபிறகு ஒலிம்பிக் ஆட்டப்போட்டியில் பங்கு பெறு வோர் தீவிரமான உடற்சோதனைக் குள்ளாகிவருகின்றனர். இங்ஙனமே, போலந்து சேனையிலுள்ளோர் ஒருவர் பெண்ணாகமாறி ஒரு குழந்தையையும் பெற்றதாக அறிகின்றோம். ஆயினும், இத்கைய பெரும்பான்மையான போலி-இருபாலியர்களில் பெண்களே ஆண்க ளெனத் தவறாக இனப்படுத்தப்பெறுகின்றனர்.

அண்மைக் காலத்தில் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரி லுள்ள ஒரு மருததுவ விடுதியில் 39-வயது கிரமபிய பெண்’ நோயாளி ஒருவரிடம் இடைநிலைப் பாலறி றிகளும் பிறப்புறுப்பு களும் காணபபெற்றன. அவை ஆணும் பெண்ணும் கலந்த நிலையை உணர்ததின. கால்வழி அடிப்படையில் இவர் எந்த இனத்தைச் சார்ந்தவர்? டாக்டர் செவரிங்காஸ் என்பார் காமச் சுரப்பி உயிரணுக் களைச (Sex- land cell, சோதித்ததில் அவற்றில் XY-நிறக் கோல் சோக்கை இருப்பதை அறிநதார். (படம-51). இதிலிருந்து மானிட இனததில் இருபாலினர் நிலை-போலியாயினும் உண்மை யாயினும்-மரபுவழிக கூறா என்ற வினா எழுகின்றது. வெள்ளாடு

11. குண்டெறிகை - Short-put.

12. Fri ; 6Tsod - Javelin throw.

வா.-15