பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுங் கெட்டான்கள் 227

பத்தில் பல தடவைகள் இருபாலுக்கிடைப்பட்ட நிலைகள் சில நேரிட்டிருப்பினும், அவை மரபுவழிப் பண்பு என்று சொல்லுவதற்கு ஆதாரம் ஏற்படவில்லை; பால் - கிறக்கோல்கள் செயற்படுவதிலோ, அன்றி சுரப்பிகளின் நிலைகுலைவினாலோ அவை தொடக்கத்தில் ஏற்படும் தற்செயலாலேயே உண்டாகின்றன.

சிப்பியைப்பற்றிக் குறிப்பிடுங்கால் பால் திருப்பத்தைக் கூறி னோம். உயர்நதவகைப் பிராணிகளிடம் இததகைய பால்திருப்பங்கள் ஏற்படாவிடினும், சில சமயம் அவற்றிடம் இயல்பிகந்த பால் திருப் பங்கள் பலவேறு நிலைகளில் நடைபெறுவதுண்டு. கோழிப் பண்ணைகளில் இத்தகைய நிகழ்ச்சிகளைக் காணலாம். சில சமயம் பல அமைதியாக முட்டையிட்டுக்கொண்டிருக்கும் பெட்டைக் கோழிகள் திடீரென்று சேவல்களாக மாறிவிடுகின்றன. அவற்றிடம், குதிமுட்கள். வாலிறகுகள். ‘கொக்கரககோ? என்ற காமக் கூவுதல் தோன்றுகின்றன. சில சமயம் ஆணுறுப்புகளும் காணப்பெறு கின்றன. சூற்பைகளில் உண்டாகும் கழலைகள்’ அல்லது வேறு அக நிலைகுலைவுகள் இந் நிலைக்குக் காரணமாகும்; இவை பெண்’ ஹார்மோன்களை அடக்கிப் பெண்ணிடம் சாதாரணமாகக் குறைந்த அளவு இருக்கும் ஆண்’ ஹார்மோன்களிடம் சுரப்பிக்கட்டுப் பாட்டினை மேற்கொள்ளுகின்றன. இதனால் ஓரளவு ஆணுறுப்பு களும் வளர்வதற்குச சாததியமாகின்றது. சோதனைச் சாலைகளில் பெட்டைக் கோழிகளிடம் சூற்பைகளை நீக்கியோ அல்லது ஆண்’ ஹார்மோன்களைச் செலுததியோ பல்வேறு நிலைகளில் இப் பால் திருப்பங்கள் உண்டாக்கப்படுகின்றன.

ஆனால் ‘பல மகளிர் ஆடவராக இருக்க விரும்பிய போதிலும்’, பெட்டைக் கோழிகள் சேவல்களாக மாறுவதுபோன்ற உருமாற்றம் மானிட இனத்தில் நேரிடுவதில்லை! மானிட இனத்தில் பால் மாற்றம் நடைபெறுவதன் பொறிநுட்பததிற்கும் பறவைகளிடம் இம் மாற்றம் நேரிடும் பொறி நுட்பத்திற்கும் சில முறைகளில் வேறு பாடுகள் உள்ளன. இங்ஙனமே ஹார்மோன்களின் செயலிலும் சிறிது

18. Lurs GLIiEsir–Sex reverSais. 14. கழலைகள்-Tumours.