பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 வாழையடி வாழை

வேறுபாடுஉண்டு. சிலசமயம் மகளிரிடம் நேரிடுவதெல்லாம்முகத்தில் மயிர் தோன்றுதல், ஆழ்ந்த குரல், முகக்குறிகள், கைகள், பாதங்கள் இவை பெரிதாதல் ஆகியவைபோன்ற இடைநிலைப் பாலறிகுறி களின் மாற்றங்களேயாகும். அடிக்கடி இங்ஙனம் நேரிடுவதற்குரிய நிலை மாங்காய்ச் சுரப்பியின் ஆண்மைநிலை (Adrenal virilism) என வழங்கப் பெறுகின்றது; இது ஹார்மோனின் நிலையைக் குலைத்துவிடுகின்றது. ஆனால் பூப்பெய்திய மகளிரிடம் சூற்பை களை நீக்குவதனாலோ அல்லது அவர்களிடம் சூற்பை கழலை ஏற்படுவதனாலோ குறிப்பிடத்தக்க ஆண் தன்மை உண்டாவது அரிதாகவே நிகழ்கின்றது. ஆயினும் பூப்பெய்வதற்குமுன் மகளிரிடம் சூற்பைகளை நீக்குவதனால் அல்லது அவை செயற்படுவதில் குறை களிருப்பதனால் பாலுறுப்புகள் செயற்படாமை, கொங்கைகள் பெருக்காமை, மகளிருக்குரிய உடற்கட்டு உண்டாகாமை போன்ற குறிப்பிடத்தக்க விளைவுகள் நேரிடுகின்றன. மேலும் பூப்பெய்து வதற்கு முன்னர் மாங்காய்ச் சுரப்பிகளில் கழலைகள் ஏற்படுமாயின் ஆழ்ந்த குரல், அதிகமாக முக மயிர்கள். பாலுறுப்புகளில் இயல் பிகந்த நிலைகள் உட்பட்ட ஆணின் தன்மைகளை விளைவிக் கின்றன. இதே குறைகள் இளம் பருவத்தில் சிறுவர்களிடம் நேரிட் டால் அவை முன்கூட்டியே உடல் வளர்சசியை விளைவித்து விடுகின்றன.

மனிதர்களின் விரைகளை நீக்குவதுபற்றித தவறான கருத்துகள் கிலவி வருகின்றன. பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னா விரைகளை நீக்கினால்தான் குறிப்பிடத்தக்க அலிக்குரிய சிறப்பியல்புகள் விளைகினறன. அப் பருவத்திற்குப பிறகு, ஆணுக் குரிய உடற்கட்டு நன்கு அமைந்த பிறகு, விரைகளை நீக்குவதால் சிறிதளவு மாற்றமே விளைகின்றது. ஆயினும், காமச் சுரப்பிகளை நீக்காமலேயே, பூப்புப் பருவத்திற்கு முனனர் நிகழும் எத்தகைய சுரப்பிகளின் நிலைகுலைவும் ஆண் ஹார்மோனகள் செயற்படு வதைத் தடைப்படுததி விடும்; அது சிறுவனிடம் பெண் தன்மைக் குரிய போக்கில் அலித் தன்மையையும உண்டாக்கிவிடும். அஃதாவது, பெரிய உதடுகள், குறுகிய சரிவான தோள்கள், தாடியின்மை, உடலில் குறைவான மயிர்கள். எடுபபான குரல், முதலியவை தோன்றுகின்றன. இவ்வகைக் குறை சிறிது மாற்ற