பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுங் கெட்டான்கள் 23 1.

மேலும் கீழும் அமைந்திருக்கும். தேவைக்குமேற்பட்டுக் காணப் பெறும் முலைக்காம்புகள் பெரும்பான்மையில் வளர்ச்சிபெறா கிலையிலுள்ளவையே. ஆனால் மகளிரிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்படடவை செயற்படுபவையாக இருக்கும். இதுபற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக ஆராய்ந்து அறியப்பெறவில்லை.

மகப்பேறு ஏற்படும் அளவுவீதமும் மரபுவழிக் கூறுகளால் செல்வாக்குப் பெறுகினறது என்பதும் ஆராய்ச்சிக்குரியவையாகும். மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சிலரிடம் ஏற்படும் இரட்டைப் பிறவிகள், பல எண்ணிக்கைப் பிறவிகள், அதிகமான இனப் பெருக்க வளம் ஆகியவற்றிற்கு மரபுவழி அடிப்படை இருக்கலாம் என நம்பப்பெறுகின்றது. ஆயினும், அதிக வளத்திற்குக் காரண மான ஜீன்கள் இன்னும் கண்டறியபபெறவில்லை.

பால்வளர்ச்சிக் காலமும் ஜீன்களால் செல்வாக்குப் பெறு கின்றது என்பது தெளிவு. பூப்பு அடையும் பருவம், பூப்பு அடைதல், சூதக ஒய்வு ஆகியவை பெரும்பான்மையான மகளிரிடம் கிட்டத் தட்ட ஒரே காலததில் தற்செயலாக நடைபெறுகின்றன என்று சொல்வதற்கில்லை. அங்ஙனமே சில குடும்பங்களில் பூப்பு அடையும் பருவம், சூதக ஒயவு நேரிடும் காலம் இவை சராசரி காலத்திலிருந்து விலகி முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ நடைபெறுவதில் நாம் அறிந்த சூழ்நிலைக் காரணம் பங்கு பெறாதவரை, மரபுவழிக் கூறுதான் முக்கிய காரணமாக இருத்தல்வேண்டும். ஆனால், பூப்பெய்துங் காலங்களைப் பல்வேறு குடும்பங்களில் ஒப்பிடுங்கால் சூழ்நிலைக் கூறுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றனவா என்பதை நாம் உறுதிசெய்து கொள்ளவேண்டும். சாதகமான கூறுகள் முன்னதாகவே பூப்பு அடைவதற்கும், பாதகமான கூறுகள் தாமதமாகப் பூப்பு அடைவதற்கும் காரணமாகின்றன என்று முடிவு கட்டப்பெற்றுள்ளது. வெப்ப நாடுகளில் மகளிர் முன்னதாகவே பூப்படைகின்றனர் என்ற கருத்து தவறு என்று பல ஆய்வுகளால் மெய்ப்பிக்கப்பெற்றுள்ளது.

சிலரிடம் 2 அல்லது 3 வயதிலேயே பூப்பு நிகழ்வது சுரப்பி களின் நிலைகுலைவே காரணமாகும். அடித்தலைச் சுரப்பிகள் ‘

1 7. 9l-55so604 drr'? - Ptuitary gland