பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வாழையடி வாழை

அல்லது சூற்பைகளில் ஏற்படும் கழலைகளே இந் நிகழ்ச்சிக்குக் காரணமாகும். ஆனால் சிலரிடம் பூப்பு நிகழ்வதற்கு இயல்பிகந்த ‘காலப் பொறி நுட்பததின்’ இயல்பிகந்த வேகமே இதனை நிகழ் விக்கின்றது. இதற்கு என்ன காரணமாக இருந்தாலும் 1939இல் பெரு என்ற நாட்டைச்சேர்ந்த ஒரு பெண் 5-வது வயதிலேயே மகப் பேறு அடைந்ததை அறிகின்றோம். 33 வயதிலேயே ஒரு சிறுமி பூப்பெய்திய செய்தி யேல் பல்கலைக்கழக நிபுணர்களால் அறியப் பெற்றுள்ளது. இவள் 13வயதில் சூதக ஒய்வு அடைந்து 18-வது வயதில் மூளைக் கழலைக் காரணமாக மேற்கொள்ளப்பெற்ற அறுவை சிகிச்சையின்பொழுது இறந்து போனாள்.

பால் வளர்ச்சியில் நேரிடும் இயல்பிகந்த தன்மைகளையெல் லாம் ஒரு சேர வைத்துச் சிந்திக்குங்கால், இவற்றுள் ஒரு சில எந்த அளவு மரபுக் கூறுகளால் நிகழ்வன, இவை எந்த அளவு அடிக்கடி கிகழாதுள்ளன என்பதைப்பற்றி நாம் அறிவது என்ன ? பெரும் பானமையோரிடம் ‘பால் ஜீன்கள் கிட்டத்தட்ட மிகச் சரியாகச் செயற்பட்டுப் பால் அமைப்பில் பங்கு பெறுவதாகும். நம்முடைய உடலமைப்பில் வேறு எந்தப் பகுதியிலும் மரபுவழியாக வரும் இத் தகைய கேடளாவிய குறைகளைக் காண்பதில்லை. இயற்கை யன்னையின் திருவிளையாடல்களின் நுட்பத்தை முற்றிலும் யாவர் தாம் அறியவல்லார் ?

18. (oftonL - Ovary.