பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி வகைகள்

- ‘மணிமேகலை மருததுவ மனை'யிலுள்ள தலைமை மருததுவர் இங்ஙனம் கூறுகின்றார் :

‘காவேரிக்குக் குழந்தை வேண்டும் என்று ஆசைதான்; ஆயி னும் அவளே குழந்தைக்கு எமனாகிவிட்டாள். இது முற்றிலும் உண்மைதான். ஆனால், இன்னும் அவளுககு எத்தனைக் குழவிகள பிறப்பினும். இதே முறையில்தான் அவர்கட்கு இறப்பினை விளை விபபாள அவளுடைய குருதியில் மரபுவழியாக வரும் ‘ஏதோ ஒன்று’ அவளுடைய குழந்தைகளின் குருதிக்குப் பகையாக உளளது.”

மேற்குறிப்பிட்ட மருத்துவர் காவேரிக்கு மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான தாய்மார்களுக்கு இதையேதான் சொல்லியிருபபார். 1940இல் மருத்துவக் கால்வழி இயலார் குருதியிலுள்ள Rh-கூறி னைக கண்டறிந்த பிறகு மருத்துவ உலகில் இங்ஙனம் கூறுவது பெரு வழக்காகிவிட்டது. இங்ஙனம் விளங்காத புதிராக இருந்ததற்கு விடை கண்டுவிட்டனர். நம்முடைய நற்பேற்றின் காரணமாக இத் தகைய கொடுமைகளினின்றும் உய்யும் அறிவும் யுக்தி முறைகளும் துலக்கம் அடைந்தன.

நம்மில் பலருடைய குருதி நமது ஊனக் கண்ணிற்கு ஒரே வித மாகக் காணப்பெற்றாலும், அது பல வகைப்படும் என்று ஆய்வாளர் கள் கண்டறிந்துளளனர். ஒரே குடும்பத்திலுள்ள தாய், தகதை, மக்கள் இவர்களிடையே வெவ்வேறு வகைக் குருதிகள் இருத்தல் கூடும். ஒரே குடும்பத்திலுள்ளவாகளின் கண்கள், நிறம். மூக்கின் அமைப்பு போன்ற உடற் பண்புகள் வேறுபடுவதைப்போல குருதி