பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 வாழையடி வாழை

யும் வேறுபடும் என்று கொள்ளின் இவ் வுண்மை தெளிவாகும். 1900இல் டாக்டர் கார்ல் லாண்ஸ்டெய்னர் என்பார் வியன்னா நகரில் குருதியை ஆய்ந்துகொண்டிருந்தபொழுது நான்குவித குருதி வகைகள் இருப்பது புலனாயிற்று. இதே ஆண்டில்தான் நவீன கால்வழி இயலும் பிறந்தது. ஒரு சிலருடைய குருதியில் A என்ற ஒருவகை வேதியியல் பொருளும், இன்னும் ஒருசிலருடைய குருதி யில் B என்ற மற்றொரு வேதியியல் பொருளும், மற்றும் ஒரு சில ருடைய குருதியில் இந்த இருவகைப் பொருள்களும் இருப்பதையும் வேறு சிலருடைய குருதியில் யாதொருவித வேதியியல் பொருளில் லாமையையும் இவர் காட்டினார்; இதன்பின்னர் இவ் வகைக் குருதிகள் கால்வழியாக இறங்குவது மெய்ப்பிக்கப்பெற்றது. ஆனால் 1925இல் டாக்டர் ஃபெலிக்ஸ் பெர்ன்ஸ்டின்” என்ற புள்ளியியல் வல்லுநர் எங்ஙனம் இந்தக் கால்வழிப் பொறிநுட்பம் செயற்படு கின்றது என்பதைக் காட்டினார்.

இந்த முதன்மையான குருதி வகைகள் ஒரு முதன்மையான ஜீனின் மூன்றுவித வேறுபாடுகளால் உண்டாகின்றன. A. B என்ற வகைக் குருதிகளுக்குரிய ஜீன்கள் O வகைக்குரிய ஜீனின் மீது ஓங்கி கிற்கும் ; ஆனால் அவையிரண்டும் ஒன்றை நோக்கப் பிறிதொன்று சம வன்மையுடையவை. கிகழ்வது இது:

1. ஜீன்-A முக்கியமாக எதிர்த்தோற்றப் பொருள்-A

(Antigen-A)யை உற்பத்தி செய்கின்றது. 2. ஜீன்-B முக்கியமாக எதிர்த்தோற்றப் பொருள்-B

(antigen-B)யை உற்பத்தி செய்கின்றது. 3. ஜீன்-O எந்தவித எதிர்த்தோற்றப் பொருளையும்

உண்டாக்குவதில்லை.

மேற்குறிப்பிட்ட ஜீன்களில் இரண்டினை நாம் ஒவ்வொருவரும் மரபு வழியாகப் பெறுகின்றோம். ஒன்று தாய்வழியாகவும் மற்.

1. IDr. Karl Landsteiner, 2. Dr. Felix Bernstein.