பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 வாழையடி வாழை

எதிர்ப்பொருள்களை a, b என்று குறிப்போம். ஒருவருடைய குருதியில் ஒருவகை எதிர்த்தோற்றப் பொருள் காணப்பட்டால் அதற்கேற்ற எதிர்ப்பொருள் ஊனீரில் காணப்படமாட்டாது. அங்ஙனம் காணப்பெறின் இவற்றின் கலப்பினால் இரத்தம் கட்டியாகி மரணம் உண்டாகும். எடுத்துக்காட்டாக B எதிர்த்தோற்றப் பொருள் உடையவர் உடலில் b எதிர்ப் பொருள் இராது ; a எதிர்ப் பொருள்தான் இருக்கும்.

மேற்கூறியவற்றை நோக்கும்பொழுது குருதி அடியிற் கண்டவாறு நான்கு வகையாகின்றது :

வகை-A : சிவப்பு அணுக்களில் A என்ற எதிர்த்தோற்றப் பொருளும் ஊனீரில் b என்ற எதிர்ப் பொருளும் இருக்கும். வகை-B : சிவப்பு அணுக்களில் B என்ற எதிர்த்தோற்றப் பொருளும் ஊனீரில் a என்ற எதிர்ப் பொருளும் இருக்கும். வகை AB : சிவப்பு அணுக்களில் A என்ற எதிர்த்தோற்றப் பொருளும், B என்ற எதிர்த்தோற்றப் பொருளும் இருக்கும் ஆனால் ஊனீரில் a, b என்ற இரண்டு எதிர்ப்பொருள்களும் இல்லாதிருக்கும்.

வகை-O : சிவப்பு அணுக்களில் எதிர்த்தோற்றப் பொருள்கள் ஒன்றும் இரா : a, b என்ற எதிர்ப்பொருள்கள் இருக்கும்.

தனிப்பட்டவரைப் பொறுத்தமட்டிலும் அவருடைய உடலி லுள் எந்த வகைக் குருதி மரபு வழியாக வந்தது என்பதுபற்றி யாதொரு முக்கியத்துவமும் இல்லை. ஆனால் பிறருடைய குருதியை அவர் உடலில் செலுத்தும்போது அஃது அவருடைய குருதியுடன் பொருந்தாமல் கட்டியாகும்பொழுதும் அல்லது குருதி யணுக்கள் சிதைந்தழியும்பொழுதும்தான் சங்கடம் எழுகின்றது. O வகைக் குருதியுடையவருக்கு வேறு வகைக் குருதிகளைப் பாய்ச்சும்