பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி வகைகள் 239

தெந்த வகைக் குருதியுடன் பொருந்தும் என்பதைப் படம் (படம்-53) காட்டுகின்றது. கைகுலுக்கும் அடையாளம் குருதிவகைகள் பொருங் தும் நிலையையும் குறுககாக எதிர்த்து நிற்கும் வாள்கள் குருதி வகைகள் பொருந்தா நிலையையும் உணர்த்துகின்றன.

குருதி பாய்ச்சுவதற்கு மேற்குறிப்பிட்ட செய்திகள் போதும் என்று கடந்த ஆண்டுகளில் கருதப்பெற்றது. ஆனால் இன்று எல்லாக் கூறுகளிலும் ஒருவருடைய குருதிக்குப பொருத்தமாக வுள்ள குருதியைப் பாய்ச்சுவதே மிகவும் பாதுகாப்பானது என்று கூறுகின்றனர். இது Rh-கூறு கண்டறியப்பெற்ற பிறகு மிகவும் உறுதிப்பட்டுவிட்டது. இதையும் டாக்டர் லாண்ட்ஸ்டெய்னரும் டாக்டர் அலெகஸ1ண்டர் வெயினர்”. டாக்டர் ஃபிலிப் லெவின்” என்ற வேறு இரண்டு புகழ்பெற்ற மருத்துவ அறிஞர்களும் சேர்ந்து கண்டனர். டாக்டர் லாண்ட்ஸ்டெயினரும் டாக்டர் வெய்னரும் இந்தக் கூறினை ரீஸஸ் (Rhesus) என்ற ஒருவகைக் குரங்கினிடம் சோதனைகள் நிகழ்த்தியபோது கண்டனர். ஆகவே அக் குரங்கின் முதல் இரண்டெழுத்தாகிய Rh என்பதாலேயே இந்தக் கூறும் வழங்கப்பெறுகின்றது. இந்தக் கூறு எவ்வாறு மரபு வழியாக வருகின்றது என்றும, திரும்பத்திரும்பக் குருதி பாய்ச்சப் பெறுவதில் அதன் பங்கு யாது என்றும் அவர்கள் கண்டனர். அதன் பின்னர் டாக்டா லெவின என்பார் இந்த Rh-கூறுதான் தாய்க்கும் சேய்க்கும் இடையே குருதி பொருந்தா நிலையை விளைவிக்கின்றது என்றும், இதுவே புதிதாகப் பிறககும் குழவிகளிடம் எரிதரே பிளாஸ் டாஸிஸ் ஃபேடடாலிஸ்” என்ற ஒருவகைக் குருதிச் சோகையை விளை வித்து அவை காலன் வாய்ப்படுவதற்குக் காரணமாகின்றது என்றும் கண்டனர். இன்று Rh-விபத்துகள் வாராது தடுப்பதற்கும், வந்தால் சமாளிப்பதற்கும் முறைகள் கண்டறியப்பெற்றுள்ளன.

நம்மிடம் மேற்குறிப்பிட்ட முதன்மையான குருதிவகைப் பொருள் களுடன் Rh-வேதியியல் பொருளும் கலந்து கிடக்கின்றது. கம்மில்

5. Dr Alexander Weinar. 6. Dr. Philip Lavine. 7. Erthroblastosis fetalis.