பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.0 வாழையடி வாழை

85 சதவிகித மக்கள் இந்தவகைக் கூறினைக் கொண்ட குருதியுடைய வர்கள்; ஏனைய 15 சதவிகித மக்களிடம் இக் கூறு இல்லை. இந்த Rh-பொருள் ஓங்கி நிற்கும் ஒரு ஜீனின் செயலால் உண்டாக்கப் பெறுகின்றது. ஒருவர் இததகைய ஒன்று அல்லது இரண்டு ஜீன் களை மரபு வழியாகப் பெற்றால், அவருடைய குருதி இருதப் பொருளை உண்டாக்குகின்றது. இத்தகையவர்களை Rh-பாஸிட்டிஷ் வகையினர் எனறு வழங்குவர். அங்ஙனமே ஒருவர் பின்தங்கும் இரண்டு Rh pனகளை மரபு வழியாக அடைந்து, அவருடைய குருதி இத் தகைய கூறினை உண்டாக்காவிட்டால அவர் Rh-நெகட்டிஷ் வகையினைச் சேர்ந்தவராகின்றார்.

ஒருவர் பிறப்பதற்கு முன்னர் கருஉலக வாழ்விலேயே இந்த Rh-கூறு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. அதற்குக் காரணம் இதுதான் : ஒரு தாய் Rh-நெகட்டிவ்வாகவும் அவளது கருப்பையி லிருக்கும் சேய் Rh-பாஸிட்டிவ்வாகவும் (இவ்வகைக் குருதிக்குரிய ஜீனைத் தந்தை வழியாகப் பெற்றது) இருந்தால் சில சமயங்களில் அடியிற்கண்டவை நிகழ்கின்றன :

1. வளரும் கருக்குழந்தை தன் குருதியில் பிரத்தியேகமான Rh-பொருளை உற்பத்தி செய்யத் தொடங்கியதும். இப் பொருளின் ஒரு சிறுபகுதி நஞ்சின் வழியாகத் தாயின் குருதியோட்டத்தினுள் வடிகட்டப்பட்டுச் செல்லக்கூடும்.

2. தாயின் குருதி புதிதாகப் படையெடுத்துவரும் அயலான வேதியியற்பொருளுடன் போரிடுவதற்கு ஓர் ‘எதிர்-Rh பொருளை அல்லது எதிர்ப்பொருள்களை உண்டாக்கத் தொடங்குகின்றது.

3. தாயிடமுள்ள இந்த எதிர்ப்பொருள்களின் ஒரு பகுதி நஞ்சின் வழியாகச் சேயிடம் வந்து அதன் குருதியணுககளைத் தாக்கி அழிக்கின்றது; அல்லது வேறு வழிகளில் அவற்றிற்கு ஊறு விளை விக்கின்றது.

மேற்கூறிய மூன்று நிலைகளையும் படம் (படம்-54) விளக்கு கின்றது :