பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி வகைகள் 245

மனிதரிடம் இரண்டு Rh - பாஸிட்டிவ்’ ஜீன்கள் உள்ளனவா அல்லது அத்தகைய ஒரே ஒரு ஜீன் மட்டிலும் அவரிடம் உள்ளதா என்பதை நிலைநாட்டும். இரண்டு ஜீன்கள் அவரிடம் இருப்பின், அவருடைய ஒவ்வொரு குழவியும் ‘பாஸிட்டிவ்'வாக இருக்கும்: அது ‘நெகட்டிவ்’ தாயிடம் Rh'’ - வெருட்டலை உண்டாக்கும்: அவரிடம் ஒரு ஜீன்மட்டிலும் இருப்பின் அவருடைய குழவிகளில் ஒரு பாதிப்பேருக்கு (50%) இங்கிலை ஏற்படும்.

ஒரு Rh - நெகட்டிவ்’ தாயின் வயிற்றில் ஏற்கெனவே ஒரு ‘பாலிட்டிவ்’ குழவி இருப்பின், பல்வேறு நிலைகளில் அவளுடைய குருதியில் மேற்கொள்ளப்பெறும் சோதனைகளால் அவளுடைய குருதியில எதிர்ப்பொருள்கள் உண்டாகின்றனவா? அப்படி உண்டா னால் எப்பொழுது உண்டாகும் என்ற விவரங்களை அறியலாம். இந்த அளவுகள் குழவிக்கு ஆபத்தினை விளைவிக்கக்கூடியனவாக இருப்பின் அவற்றை நடுநிலையாக்குவதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். மிகவும் கேடுபயக்கககூடிய நிலையிலுள்ளவர் களிடம் சிஸேரியன் அறுவைமூலம் குழவிபெறச் செய்யலாம்:” அல்லது “இரு-வழி’ குருதிப் பரிமாற்றச் செயலை விரைவாக மேற்கொண்டு குழவியைக் காப்பாற்றிவிடலாம். Rh’ குழவி களையுடைய தாய்மார் தம்முடைய குழவிகட்குத் தாய்ப்பாலூட்ட லாகாது. ஏனெனில், ஒரு Rh’ குழவி யாதொரு இடையூறு மின்றி இவ்வுலகினை அடைந்த பிறகும். அவளுடைய தாய்ப்பால்’ வழியாக இத்தகைய விபத்து நிகழ்தல்கூடும். கருவுலக வாழ்வில் அவளுடைய குருதியிலுள்ள எதிர்ப்பொருள்கள் குழந்தையைத் தாக்கியதுபோலவே, அவளுடைய தாய்ப்பாலிலும் அத்தகைய எதிர்ப் பொருள்கள் இருந்து குழந்தையைப பாதிக்கலாம்.

இன்று எத்தனையோ பாதுகாப்பு முறைகள் கண்டறியப் பெற்றிருப்பதால் ஒரு Rh நெகட்டிவ்’ பெண்ணும், ஒரு Rh - பாஸிட்டிவ்’ ஆணும் திருமணம் புரிந்துகொள்வதாலும், அவர்கள் மக்கட்பேறு அடைவதாலும் அச்சம் ஒன்றும் இல்லை.

9. கருவுலக வாழ்வின் இறுதி வாரங்களில்தான் இந்த விபத்து மிக அதிகமாக இருக்கும்,