பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வாழையடி வாழை

பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டமுடியாமல் திண்டாடுகின்றது : தவிர, பொறுப்பற்றுத் தீய வழிகளில் சிங்தையைச் செலுத்தித் தான் பிறந்த குடும்பத்திற்கே இழுக்கினைத் தேடுகின்றது. அதே குடும்பத் தில் இன்னொரு பெண் குழவி திருமகளைப்போல் வனப்புடன் வளர்ந்து, இசை, நாட்டியம் போன்ற கலைகளில் கொடுமுடிகளை எட்டிவிடுகின்றது. இங்ஙனம் எத்தனையோ விதமான வேறுபாடு களுடன் ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களைக் காண்கின்றோம். ஆனால் இக் குழவிகளைப் பெற்றெடுத்த தாய்தந்தையர்கட்குக் கல்வியறிவுகூட இருப்பதில்லை. ஏதோ ஒரு சிற்றுாரில் உழவுத் தொழிலால் வாழ்க்கையை நடத்தி நகர வாழ்க்கையையே அறியாத வர்கள்தாம் இவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த மேற் குறிப் பிட்ட குழவிகளிடம் இத் திறன்கள் யாவும் மரபு வழியாகப் பெறப் பட்டனவா ? அல்லது சூழ்நிலையால் அமைந்தனவா ?

நிலத்தியல்பால் நீர்திரித் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.” என்ற வள்ளுவர் கூற்றின் பொருள்தான் என்ன? பல கல்விமான்கள்

நிறைந்த ஒரு குடும்பத்தில் பண்டித புத்திரன்’ என்ற பட்டத்தைச் சிலர் பெறுவதற்குக் காரணம் என்ன ?

ஊர்வசி போன்ற அழகுடைய மடமங்கை ஒருத்திக்குப் பெரிய அம்மை நோய் ஏற்பட்டு மிகவும் விகார உருவத்தை அடைகின்றாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் அழகுடன் இருக்கும் பொழுதும் அவள் அழகினை இழந்த பிறகும் பெற்றெடுத்த குழந்தை களிடம் வேறுபாடுகள் காண முடியுமா ?

முப்பது வயதிற்குக்கீழ் இருக்கும்பொழுது ஒருவருக்குப் பல குழந்தைகள் பிறக்கின்றன. ஐம்பது வயதை எட்டிய பிறகும் அவருக்கு மீண்டும் சில குழவிகள் ஏற்படுகின்றன. இத்தகைய குழவிகளிடம் உடற் கூறுகள். திறன்கள், அறிதிறன்கள் முதலிய வற்றில் வேறுபாடுகள் காணப்பெறுமா? அப்படிக் காண நேர்ந்தால் அதற்குக் காரணங்கள் யாவை ?

2. குறள்-452.