பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி ஆராய்ச்சியின் பயன்கள் 247

யிலும், M. N என்ற குறை நிரப்புவகைக் குருதிகளின் அடிப்படை யிலும் மேற்கொள்ளப்பெற்றன. இந்தச் சோதனைகளால் வழக்கில் சிக்கிக்கொள்பவர்கள் மூன்றில் ஒருவர் வீதம் விலக்கிக்கொள்ள முடிந்தது. Rh - கூறினும் அதன் பல்வேறு உட்பிரிவுகளும் கண்டறியப்பெற்ற பிறகு 100க்கு 55 பேர்வீதம் பிடியினின்றும் விலக்கிக்கொள்ள முடிந்தது.

தந்தை வழியின்மையை மெய்ப்பிக்கும் சோதனைகள் எங்ஙனம் விலக்கப்பெறுகின்றன என்பதை உண்மையில் நடைபெற்ற ஒருசில வழக்குகளைக் கொண்டு விளக்குவோம்.

(1) நியுயார்க் நகரிலுள்ள நங்கையொருத்தி எங்கும் கலந்து பழ கும் செல்வாக்குள்ள ஓர் ஆடவர்மீது வழக்கொன்றைத் தொடுத்தாள். அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்ததால் தான் அவர்மூலம் ஒரு குழந்தையைப் பெற்றதாக நீதிமன்றத்தில் வழக்காடினாள். குழந்தையின் குருதி A என்றும், தாயின் குருதி 0 என்றும் சோதனைகள் காட்டின. ஆகவே, குழந்தையின் A ஜீன் தந்தையிடமிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் குற்றம் சாட்டப் பெற்றவரின் குருதி (தாயின் குருதியைப் போலவே) 0 வாக இருந்தது. இஃது அவர் குழந்தையின் A ஜீனுக்குக் காரணம் இன் மையைக் காட்டியதால் அவருடைய வழக்கு தள்ளுபடி செய்யப் பெற்றது. இங்ஙனமே குழந்தை O வாகவும், AB தந்தையாகவும் (அல் லது இங்கிலை மாறியிருப்பினும்) இருந்தாலும் அல்லது குழந்தை B யாக இருந்து தந்தையிடமும் தாயிடமும் B அல்லதுAB குருதி இல்லா திருந்தாலும் வேறு விலக்கற் சோதனைகள் மேற்கொள்ளப் பெறுதல்

கூடும்.

அடுத்து, மேற்கூறிய முக்கிய குருதி வகைகளின் மீது யாதொன் றும் மெய்பபிக்க முடியாத நிலை எழுங்கால், M, N சோதனைகள் மேற்கொள்ளப்பெறுகின்றன. M, N என்ற குறை நிரப்புக் குருதிப்

2. 1927இல் டாக்டர் லாயிட்ஸ்டெயினரும், டாக்டர் லெவினும் M, N, P குருதிப் பொருள்களைக் கண்டறிந்தனர். இவை புதிய குருதி வகைகளை இனப்படுத்தப் பயன்படினும் அவை குருதி கட்டியாவதற்குக் காரணமாகாமையினால், அவற்றால் மருத்துவப் பயன்கள் இல்லை எனினும், அவை குடிவழியைக் கண்டறிவதில் பயன்படுகின்றன.