பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி ஆராய்ச்சியின் பயன்கள் 249

கொள்ளப்பெறினும் அவற்றால் வழக்கினைக் கட்டுப்படுத்த முடியாது. முதன்மை நிலைக் குருதிச் சோதனைகளால் குழந்தை யின் குருதி B என்றும், தாயின் குருதி A என்றும் நடிகரின் குருதி 0 என்றும் தெரிந்தது. இவை நடிகர் குழந்தையின் தந்தை அன்று என்று மெய்ப்பித்தன. ஆனால் திறமையுள்ள வழக்குரைஞர் M. N சோதனைகள் நடிகரை நிகழக்கூடிய தந்தை என்பதை விலக்க வில்லையே என்று வாதித்தார். தீர்ப்புச் சான்றாளர் குழுவும்” இவ் வழக்கு இருபுறமும் 50 சதவிகிதம் உண்மை உளளது என்று குறிப்பிட்டு கடிகருக்கு விரோதமாகக் கூறிவிட்டது. எனவே, நடிகருக்கு விரோதமாக வழக்கில் தீர்ப்பு கூறப்பெற்றது. ஆயினும் குருதிச் சோதனைகட்கு அதிக மதிப்பு தரக் கூடிய நீதிமன்றங்களில் இந் நிலை ஏற்பட முடியாது.

(4) கியுயார்க் நகரில் 1947 இல் ஒரு நீதிமன்றத்தில் முதன் முதலாக Rh’ கூறுக் குரிய சோதனைகளால் ஒரு வழக்கின் உண்மை நிலைநாட்டப் பெற்றது. இருபது வயதுள்ள இளைஞன் ஒருவன் பதினாறு வயதுள்ள கங்கை யொருத்தியை மணம் புரிந்து கொண்டான். திருமணம் கிகழ்ந்தபொழுது அவள் சூலுற்றிருந் தாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு அவனே தந்தை என்று அவள் வாதாடியதால் அவன் திருமணத்திற்கு இசைய வேண்டிய தாயிற்று. குழந்தை பிறந்ததும் குருதிச சோதனைகள் மேற் கொள்ளப்பெற்றன. A-B-O சோதனைகளும் M-N சோதனை களும் உண்மையை மெய்ப்பிககவில்லை. ஆனால் டாக்டர் வெயினர் Rh'-சோதனைகளைத் தொடர்ந்து செய்ததால், அவளுடைய கணவர் அக் குழந்தையின் தந்தையாக இருத்தல் முடியாது என்ற உண்மை தெளிவாகப் புலனாயிற்று. நீதிபதியும் அங்ஙனமே முடிவு கூறினார்.

மருத்துவ விடுதிகளில் குழந்தைகள் மாறித் தவறானவர்கட்கு அளிக்கப்பெற்றுவிட்டால், அத் தவற்றினை மெய்ப்பிக்கக் குருதிச் சோதனைகள் பெரிதும் பயன்படுகின்றன. இன்றைய நிலையில் மருத்துவ விடுதிகளில் இங்ஙனம் நிகழாதிருக்க எத்தனையோ முன்

8. தீர்ப்புச் சான்றாளர் குழு - Jury.