பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 வாழையடி வாழை,

எச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பெறுகின்றன எனினும் இங்ஙனம் தவறு நிகழ்ந்துவிடின், குழந்தைகளின குருதி, அவற்றின பெற்றோர் களின் குருதி-இவற்றைச் சோதித்துத் தவறு நீக்கப்பெறுகின்றது. இங்ஙனம் நிகழ்ந்த ஒனறிரண்டு தவறுகளைக் காண்போம்.

(1) 1947இல் மருத்துவ விடுதியொன்றில் இத்தகைய தவறு நேர்ந்துவிட்டது. டாக்டர் வெயினர் என்பார்தாம் சோதனை களை மேற்கொண்டு தவற்றினைச் சரிப்படுத்தினார். ஸ்விட்ஸர் லாந்து நாட்டில் ஐந்து வயதுள்ள இரட்டைச சிறுவர்களும் மற்றொரு சிறுவனும் இருந்துவந்தனர். இரட்டைச் சிறுவர்களின தந்தைக்குத் தமது மக்களிடையே காணப்பெற்ற வேறறுமைகள் புதிராகவே இருந்தன. ஒருநாள் அவர் சாரணர் படையொன்றினைக் கவனித் துக் கொண்டிருந்தபொழுது, அந்தப் படை வரிசையொன்றிலிருந்த இளைஞன் ஒருவன் வியத்தகுமுறையில் எல்லாவற்றிலும் தம் னுடைய இரடடை மக்களில் ஒருவனை யொத்திருப்பதைக் கண்டாா. உடனே அவனைப்பற்றி விவரமாக விசாரிததபொழுது அவன் தம் முடைய மக்கள பிறந்த அதே மருத்துவ விடுதியில் அதே நாளன்று பிறந்தான் என்பதை அறிநதார். அந்த மூன்று சிறுவர்கள். அவர் களின் பெற்றோர்கள் இவர்களின் குருதியில் சோதனைகள் மேற் கொள்ளப்பெற்றன. A-B-0 சோதனைகளும் M-N சோதனைகளும் யாதொன்றையும் மெய்ப்பிக்கவில்லை. ஆகவே, அவர்களுடைய குருதிகள் டாக்டர் வெயினருக்குக் கடல்கடந்து அனுப்பப்பெற்றன. அவர் மேற்கொண்ட Rh'-சோதனையால் குழந்தைகள் தவறாக மாறியிருக்கவேண்டும் என்று தெரிந்தது. உடனே ஸ்விட்ஸர்லாந்து நீதிமன்றம் தவறான இரட்டைச சிறுவனும் சரியான இரட்டைச் சிறுவனும் மாற்றிக்கொள்ளப்பெறவேண்டும் என்ற தீர்ப்பை அளித்தது.

(2) சிகாகோ நகரில் நடைபெற்ற ஒரு வியப்பான ‘இரட்டை யர்’ வழக்கினை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். உணவு விடுதி நடத்திக்கொண்டிருந்த கைம்பெண் ஒருத்திக்கு ‘இருகரு இரட்டைக் குழவிகள்’ பிறந்தன. அந்த விடுதியில் உணவு கொண்டிருந்தவர்களில் இருவர் அவளுடைய காதலர்கள். அந்த இருவரும் தாமதாம் அந்தக் குழவிகளின் தந்தை என்று உரிமை