பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நெடுநாள் வாழ்வு

நமது வாழ்நாளை வரையறுத்துச சொன்னவர்கள் இதுகாறும் இந்த உலகில் தோன்றவில்லை. இந்த உண்மையைப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு மாங்குடி மருதனார் கூறுகின்றார்; மறக்கள வேள்வியில் ஊன்றிக்கிடந்த அவனை அறக்கள வேள்வியில் ஈடுபடுமாறு தெருட்டுகின்றார். சேரன் செங்குட்டுவனுக்கும் மாடலன் இநத உண்மையை உரைதது அவனையும் இந்த வேள்வியின்பால் ஆற்றுபபடுத்துகின்றார். ஆயின், தொண்டரடிபபொடியாழ்வார்.

வேதநூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவ ரேனும்

பாதியும் உறங்கிப் போகும் நின்றஇப் பதினை யாண்டு

பேதைபா லகனதாகும் பிணிபசி மூப்புத்துன்பம்.”

(பதின் ஐயாண்டு - ஐம்பது ஆண்டு)

என்று மனிதனுடைய ஆயுட்காலததை நூறு ஆண்டுகள் என்பதாக உரைத்திடுவர். கிறிததவர் மறையாகிய விவிலியததிலும் சிலருடைய ஆயுட்காலம் கணக்கிட்டுக் கூறப்பெற்றுள்ளது. ஆயினும், உலகி லுள்ள எல்லாப் பகுதி மக்களிடமும் ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு ஊழின்வலியால் வருகின்றனர் என்றும். அவர்கள் இந்த உலகில் தங்கும் காலததை ஊழ் முன்னரே வரையறை செய்துள்ளது என்றும் நம்புகின்றனர். எனினும், அறிவியலறிஞர்களும் ஆயுள் காப்பீட்டுக் கணக்கரும் மனிதனது ஆயுளைப்பற்றிக் கூறும் பண்டைய கருத்துக்களை நம்புவதில்லை.

1. திருமாலை. 2. sobujirassroot-G & Gordst - Insurance actuaries.