பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 வாழையடி வாழை

நாம் ‘ஆக்க நிலையுற்ற நீடுவாழ்வு’ என்று வழங்கலாம். ஈண்டு * ஆக்கநிலையுற்ற’ என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்த நீடுவாழ்வில் சூழ்நிலையும் பங்கு பெறுகின்றது. நெடுநாள் வாழ்வில் சூழ்நிலை பங்கு பெறுவதைப்போல் வேறு எத் துறையிலும் பங்குபெறுவதில்லை என்றுகூடச் சொல்லாம். நண்பர் “நெடுமாறன்’ தான் நெடுநாள் வாழ்ந்த பெற்றோர் வழி வந்தவர் என்று பெருமை பேசிக்கொள்ளலாம்; தன்னுடைய மூதாதையர் யாவரும் தொண்ணுறு வயதுவரை வாழ்ந்தவர்கள் என்று சொல்லிககொள்ளலாம். ஆனால் அவர் குளிர்கால கள்ளிரவில் குடிவெறியுடன் சிறுமழை தூவிக்கொண்டிருக்கும் போது மலைநாட்டில் தம்முடைய தானியங்கியை வேகமாக ஒட்டிவந்து குதிரை-லாடம்போல் வளைந்துள்ள சாலையில் திரும்பும் போதுதான் தாம் கூறிவந்த தற்பெருமை செல்லாக் காசாகுவதை கன்கு உணரமுடியும்.

நெடு வாழ்வைக் குறித்துப் பேசும்பொழுது நாம் பொதுவான சராசரி நிலைகளைத்தான் கருதுதல் முடியும். அறிவியல் முன் னேற்றம் அடைந்துவரும் இக் காலத்தில் நாம் வாழும் காலம் அதி கரிதது வருகின்றது என்று செய்தித் தாள்களில் படிக்கின்றோம். கலவாழ்வுத் துறையில் முன்னேற்றம், மருத்துவத்துறையில் முன் னேற்றம், வாழ்க்கை வசதிகளில் முன்னேற்றம்-இவற்றால் “உன்னாந்தமைந்த நெடுவாழ்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது; ஆனால் தப்பிப் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரித் துள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளததான் வேண்டும.

இன்று குழந்தைகள் இறக்கும் விகிதம் குறைந்துள்ளது! நூறாண்டுகட்கு முன்னர் அமெரிக்காவில் ஆறு குழவிகளில் ஒன்று வீதம் ஓராண்டு முடிவதற்கு முன்னரே இறந்தது. இந்த நூற்றாண் டின் தொடக்கம் இந்த விகிதம் எட்டிற்கு ஒன்றாக இருந்தது. இப் பொழுது முபபதிற்கு ஒன்றாக உளது. காசநோயால் இறபபவர்கள்

8. <},# filgosouqp fIr6)] - Conditioned longevity. 4. p 6irst Tito Qp(96.1mps 1–Potential longevity. 5. தப்பிப்பிழைக்கும் வாய்ப்புகள்-Chances of survival.