பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமது நெடுநாள் வாழ்வு 255

அறுபதிற்கு ஒன்றாகக் குறைந்துவிட்டது. முற்காலத்தால் குழவி களும் வளாந்தவாகளும் பெருவாரியாக இறப்பதற்குக் காரணமாக இருந்து கொள்ளை நோய்களும் தொத்து நோய்களும் நவீன அறிவியல் துணையால் மறைந்தே போயின நீரிழிவால மரித்தவர் களின் தொகை இன்று இன்சுலின் சிகிசசையால் குறைக்கப்பட்டு விட்டது பென்சிலின, கந்தக மருந்துகள், வேறு கிருமி நாசினிகள் ஆயிரககணக்கானவர்களைக் காலன் வாய்பபடாது காத்துவரு கின்றன. இததகைய மருத்துவததுறை அருஞ்செயல்களும், வாழ்ககை வசதிகளின் முன்னேற்றமும் முதிர்ச்சிப பருவத்தையே பார்ப்பதறகு வாய்ப்பே இல்லாத குழவிகளை வாழவைத்து வருகின்றன.

சிறு வயதில் முதல் சில பத்தாண்டுகளில் இறப்பதற்குக் காரணமான அச்சுறுததல்கள் குறைக்கப்பட்ட தும் பிற்காலத்தில் மக்களைத தாககும் இதய நோய்கள், புற்றுநோய், பெருமூளையில் குருதிப்போக்கு”, நெஃப்ரிட்டிஸ் (சிறுநீரக நோய்) முதலிய நோய் களால் இறபபதும் அதிகமாகக் குறைந்துவிடுகின்றது. எனினும், இந்த நூறறாண்டிற்குப் பின்னர் நடுததர வயதுள்ளவர்களும் சராசரி மூன்றாண்டுகள் அதிகமாக வாழ்வதிலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இங்ஙனமே, முதியோர்களின் வாழ்நாளும் அதிகரிக்கப்படும் என்ப தற்கு யாதொரு ஐயமும் இல்லை.

இங்ஙனம் மக்களில் ஒருசிலர் அதிக வாழ்நாளையும் சிலர் குறைவான வாழ்நாளையும் கொண்டிருத்தலின், இத்தகைய உள்ளார்ந்த எல்லைகளை அறுதியிடும் மரபுவழியின் பங்கு என்ன என்பதை நாம் அறிந்துகொளவது இன்றியமையாததாகின்றது. பல வழிகளில் இது பங்கு பெறுகின்றது என்பதை மேலேயுள்ள இயல் களில் குறிப்பிட்டோம். அவை : (1) நேர் முறையில் இறப்பினை விளைவிககும்’ ஜீன்கள், இவை ஒரு தனியாளின் வாழ்க்கையை சில முககிய கூறுகளில் குறைபடத் தொடங்கச் செய்து தொடக்க காலத்திலேயே இறபபினை விளைவிக்கின்றது; (2) கொடிய நோய்களை விளைவிக்கும் தீய ஜீன்கள்'; இதனால் சராசரி வாழ்

6. பெருமூளையில் குருதிப்போக்கு - Cerebral hemorrage.