பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 வாழையடி வாழை

நாள் முடியும்முன்னர் மரணம் நேரிடுகின்றது; (3) பல்வேறு ஜீன் கள் ஒன்று சேர்ந்து ஓர் எல்லையை அமைத்தல்: இந்த எல்லைக்கு மேல் உடலின் பல்வேறு பகுதிகள் இணைந்து செயலாற்றாமையால் உடல் குன்றிப்போகின்றது.

(1) இறப்பினை விளைவிக்கும் ஜீன்களில் மிகக் கொடுமை யானவை மறலிகள்” ஆகும். இவை எல்லா உயிர்ப்பிராணிகளிடமும் காணபபடுபவை. இவை கருவுலக வாழ்விலோ அல்லது பிறந்த சில நாட்களிலோ இறப்பினை நிகழ்த்திவிடுகின்றன. இந்த ஜீன் கள் குறைந்தபட்சம் இரண்டு இணைந்தே செயற்படவேண்டும்; இவை இரண்டும் இரண்டு பெற்றோர் வழி வந்தவையாகும். முக்கியமான ஜீன்களுள் கொடுமையான குறைபாடுகளை விளை விக்கும் இரண்டு ஜீன்கள் இணைந்து செயற்படுங்கால் அவற்றின் கொடுமை அதிகரிதது இறப்பு நிகழ்ந்துவிடுகின்றது இன்று ஆய் வுகளின்மூலம் இத்தகைய பல ஜீன்கள் இனங்கண்டறியபபெற்றுள் ளன. எ-டு. குட்டை விரல்கள் அமைவதற்குக காரணமாகவுள் ளவை; ஒருவித குருதி கோயினை விளைவிப்பவை. இவற்றைத் தவிர யானைத்தோல், இளஞசூல் நிலையில் தொகுதியான எலும்பு முறிவு, கணையத்தில் (Pancreas) தசைநார் நோய் புனிற்றிளங் குழவிகளிடம் மஞ்சட்காமாலை நோய் ஆகியவை ஏற்படுவதற்குக் காரணமாகவுள்ள நான்கு ஜீன்களும் கண்டறியப்பெற்றுள்ளன.

மேற்கூறிய மறலி ஜீன்களுடன் இறப்பினை விளைவிக்கும் ஜீன்கள் சேர்ந்து ஒருவருக்குக் குழவிப் பருவத்தில் அல்லது அதற். குச் சற்றுப்பின்னுள்ள பருவததில் இறபபினை விளைவித்துவிடும். இவற்றுள் பல்வேறு மன நோய்களை விளைவிககும் ஜீன்கள் உள்ளன; சிலவற்றை முன் இயல்களில் விளககியுள்ளோம்.

(2) ஹெமொஃபீலியா, வேறு குருதி நோய்கள், சிலவகை நரம்புக்கோளாறுகள், அரிய கழலைகள் முதலியவற்றை விளைவிக் கும் நோய்கள் இறப்பினைப் பல ஆண்டுகள் முனனதாகவே துரிதப்

7. un ps@essir - Lethals.

8. Amaurotic family idiosy, maligment freckles, glima! retuia etc