பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமது நெடுநாள் வாழ்வு 257

படுத்துகின்றன. நீரிழிவு நோயினை விளைவிக்கும் ஜீன்கள் பெரும் பாலோரிடம் ஓரளவு குறு வாழ்வினை உண்டாக்குகின்றன. மரபு வழியாக வரும் கொடிய நோய்கடகும் ஒருவரது வாழ்நாள்கட்கும் கேரிய தொடர்பு உள்ளது என்பது மட்டிலும் உறுதி.

(3) இறுதியாக, குறிப்பிட்ட நோய்களின்மூலம் இறப்பினை விளைவிக்கும் நேரான காரணத்தைத் தவிர வேறு இயல்பான’ கூறுகளும் உள்ளன. இவையும் ஒருவரது வாழ்நாள் எல்லையினை வகுக்கின்றன, முக்கிய உறுப்புகளின் தேய்மானம், இழையங்கள் மூப்பு அடைதல், சுரப்பிகள் இயங்குவதில் மந்தநிலை, குருதிய பாய் குழல்கள் நீளுந்தன்மையை இழத்தல், குருதியணுக்கள் அல்லது மூளையணுக்கள் சிதைவடைதல், விட்டமின்கள் இல்லாமை போன்ற வேறு நிலைமைகளும் ஒருவரது வாழ்நாள் வரம்பினை வகுக்கக் காரணமாகின்றன என்பதுபற்றிப் பல கொள்கைகள் எழுந்துள்ளன. உடல் குன்றிப்போவதற்குரிய நிலைமைகளிலெல்லாம் மரபுவழிச் செல்வாக்குகள் பங்கு பெறுகின்றன. தொடக்கத்தில் சூழ்நிலையால் கேரிடும் ஆபத்துகளைக் கடந்து மக்கள் அறுபது அலலது எழுபது வயது எல்லைகளை அடைந்துவிட்டால், அதற்குமேல் வாழ்நாள் எல்லை நீட்டிப்பது பெரும்பாலும் மரபுவழிக் கூறுகளே முக்கிய காரணங்களாக உள்ளன என்று அறிவியலறிஞர்கள் அறுதியிட்டுள் ளனர்.

பல்வேறு குடும்பங்களில் நெடுநாள் வாழ்க்கை மரபுவழியாக இறங்கி வருவதையும், மக்கட் டொகையில் பல்வேறு குழுககளில் இங்கிலை கிலவி வருவதையும் நாம் கூர்ந்து நோக்குங்கால் மேற் கூறப்பெற்ற கருத்துகட்குப் பொருள் தெளிவாகின்றது. ஆயுள் காப்பு கிறுவனங்கள், தனிப்பட்ட ஆய்வாளர்கள் இவர்கள் மேற். கொண்ட ஆய்வுகளால் பாட்டன்-பாட்டிமார். பெற்றோர். குழந்தை கள் இவர்களின் சராசரி வாழ்நாளில் குறிப்பிடத்தகக ஓர் இணைப் புத் தொடர்பு இருப்பதாக அறியக்கிடக்கின்றது. இவ்வாய்வுகளால் கண்டறியப்பெற்ற முடிவுகள் வருமாறு :

1. நெடுநாள் வாழும் பெற்றோர்கட்குப் பிறந்தவர்களிடையே ஒவ்வொரு வயதிலும் குறைவான எண்ணிக்கையுள்ளவர்களே இறக் கின்றனர்.

atr.-17