பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமது நெடுநாள் வாழ்வு 259

விகிதமும் அதிகரித்து நிற்கும்; ஆயுட்காலத்தின் சராசரியும் உயர்ந்து காணப்பெறும். பல ஆய்வுகள் அதனை உண்மையாக்கியுள்ளன.

எனினும், மக்களின் வாழ்க்கை நிலைகட்கும் அவர்களுடைய மரபுவழி அமைப்பிற்கும் யாதொரு தொடர்பும் இல்லாமல் இருப்ப தில்லை. எடுத்துக்காட்டாக பெற்றோர் அற்பாயுளையுடையவர் களாக இருப்பின், அதனால் குழவிகட்கு இளமையிலேயே பாதக மான சூழ்நிலை ஏற்படுகின்றது. ‘மாதா இறப்பின் மகன் காவில் நற்சுவை போம்; உணவும் ஊட்டமும்பெற வாய்ப்பில்லாது போகும். தந்தை இறப்பின், குழவிகள் நல்குரவு என்னும் இடும்பையுட்பட்டு பலவகைத் துன்பங்களை எய்துவர். இத்தகைய குழவிகள் ஆயுட் காலமும் குறைந்துவிடும் என்பதற்கு ஐயமில்லை. இத்தகைய வாய்ப்புகளை எய்தும குழவிகளிடம் மரபுவழியும் சூழ்கிலையும் பின்னிக் கிடப்பதைக காண்கின்றோம்.

ஒருவருடைய தொழிலும்கூட மரபுவழிக் கூறு பங்குபெறு கின்றது. அவர் மேற்கொண்டுள்ள தொழிலும அவரது திறமை யைப்பொறுத்தே அமைகின்றது என்பது வெளிப்படை. அமெரிகக ஐக்கிய நாடுகளிலும் இங்கிலாந்திலும் மேற்கொண்ட ஆய்வுகளால் பல்வேறு தொழிலகளிலுள்ளவர்களிடம் சராசரி வாழ்காள குறைந்து கொண்டுவருவதை அறிகின்றோம். குருமார், அதன பிறகு வழக்குரைஞர்கள். பொறியியல் வல்லுநர். மருத்துவர்கள் இவர்களது சராசரி வாழ்நாள் உயாந்துள்ளது. இவர்கட்குச் சற்றுக் கீழாக வணிகர்கள் (உரிமையாளர்கள், மேலாளர்கள்). வெள்ளைவேட்டிப் பணியாளர்கள் வருகின்றனர். அதன்பிறகு கைத்திறப் பணியாளர் களும் பிறபணியாளர்களும் அமைகின்றனர். சுரங்க வேலையாட் களும் கருங்கல் தொழிலாளிகளும் மிகக் குறைந்த சராசரி வாழ் காளையுடையவர்களாக உள்ளனர். உழவர்களின் வாழ்நாள் முதற்குழுவினர்களின் வாழ்நாளையொட்டியும் சிலசமயம் அவர் களுடையதைவிடச் சிறிதளவு அதிகமாகவும் உள்ளது. மரபுவழிக் கூறுகளில், குறிப்பாக அறிதிறனில் குறைவாகவுள்ளவர்கட்குத் தாழ்ந்தநிலை அலுவல்கள் கிடைப்பதால், அவர்களது வாழ்காளும் அவர்களது குழவிகளின் வாழ்நாளும் குறைந்துபோவது இயல்பு. அங்ஙனமே, அறிதிறன் மிக்கவர்கள் நல்ல அலுவல்களைப்பெற்று