பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமது கெடுநாள் வாழ்வு 261

முதலாவது: சூழ்நிலை நம்முடைய வாழ்க்கை தொடங்கு வதையும் அதன்பிறகு நாம் வாழ்க்கை நடத்தின நிலைமைகளையும் தற்சமயம் வாழும் நிலைமைகளையும், பணியாற்றும் சூழ்நிலையை யும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதையும் பொறுத்ததுதான் சூழ்நிலை என்பது.

இரண்டாவது : மரபுவழியாகப்பெற்ற வலிமையையும் வலியின் மையையும் (திடடமான நோய்கள், குறைகள், பொதுவாக எதிர்த்து நிற்கவல்ல கூறுகள் ஆகியவை), குறிப்பாக நம்முடைய பாலையும் பொறுத்தது.

மூன்றாவது: எதிர்பாராத நற்பேறு.

கடந்தகால மக்களின், இன்றைய மக்கள இவர்களின் வாழ் நாளின் வேறுபாடுகளும், அங்ஙனமே பிற்போக்கு மக்கள் முற்போக்கு மக்கள் இவர்களின் வாழ்நாளின் வேறுபாடுகளும் பெரும்பாலும் மரபுவழியைவிடச் சூழ்நிலையையே பொறுத்திருப்பதால் சூழ் கிலைக்கு ஈண்டு முதலிடம் தரப்பெற்றுள்ளது என்பதை நாம் அறிதல் வேண்டும்.

அறிஞர் பலர் மனிதனது வாழ்நாளை உயர்த்தலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். அது மிகச் சிறிதளவுதான் இயலும் எனபதையும் நாம் அறிதல்வேண்டும். டாக்டர் அலெக்ஸிஸ்கரல் என்பார். ஓர் உயிருள்ள இழையத்தை (கோழியின் இதயம்) முடிவில்லாமல் பலநாள்கள் வைத்திருக்கலாம் என்று மெய்ப்பித்ததி லிருந்து மனிதர்களையும் இறவாது தடுக்கலாம் என்று சிலர் கம்புகின்றனர். ஆனால் தனியாகப் பிரித்தெடுத்த இழையத்தை எப்போதும் உயிருடன் வைத்திருக்கும் நிலைவேறு: எல்லா முக்கிய உள்ஸ்ரீபபுகளும் பகுதிகளும் அடங்கியதும் வளர்ந்துகொண்டே ஒரேமாதிரியாக இயங்கிவருவதுமான மானிட உடலைப் பாது காப்பது வேறு. ஆனால் மிகவும் வன்மையற்ற பகுதியைத் தக்கவாறு பாதுகாத்தால் வாழ்நாளைச் சிறிதளவு அதிகரிக்கமுடியும் என்பதை காம் அறிவோம். ஆயினும், 120 வயதிற்குமேல் வாழவைக்க முடியாது என்று சிலர் நம்பினாலும் சில அறிவியலறிஞர்கள் 150 வயதுவரை வாழவைப்பது இயலாததன்று என்று நம்புகின்றனர்.